குலசை தசரா விழா: போக்குவரத்து மாற்றங்களை தெரிந்து கொள்ள இதோ வழித்தட பட்டியல்

குலசை தசரா விழா: போக்குவரத்து மாற்றங்களை தெரிந்து கொள்ள இதோ வழித்தட பட்டியல்
X

குலசை தசரா திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட வழித்தட வரைபடம்.

குலசை தசரா விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 24.10.2023 அன்று இரவு 12 மணிக்கு நடைபெறும். இதனையடுத்து 25.10.2023 அன்று கொடியிறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும்.

தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் அக்டோபர் 25 ஆம் தேதி வரை பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், பக்தர்களின் பாதுகாப்பு வசதியையும் கருத்தில் கொண்டு போக்குவரத்து மாற்றம் மற்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-


திருச்செந்தூரிலில் இருந்து குலசேகரன்பட்டினம் கடற்கரை சாலை வழியாக மணப்பாடு, பெரியதாழை, உவரி மார்க்கமாக கன்னியாகுமரி செல்லும், குலசேகரன்பட்டினம் திருவிழாவிற்கு வராத மற்ற வாகனங்கள் அனைத்தும், குலசேகரன்பட்டினத்தை கடந்து செல்ல முடியாதபட்சத்தில், அவைகள் திருச்செந்தூர், பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம், மணிநகர் மார்க்கமாக மணப்பாடு, பெரியதாழை வழியாக கன்னியாகுமரி செல்ல வேண்டும் அல்லது சாத்தான்குளம், திசையன்விளை மார்க்கமாக உவரி வழியாக கன்னியாகுமரி செல்ல வேண்டும்.

கன்னியாகுமரி, உவரி, பெரியதாழை, மணப்பாடு, கடற்கரை சாலை வழியாக குலசேகரன்பட்டினம் மார்க்கமாக திருச்செந்தூர் செல்லும், குலசேகரன்பட்டினம் திருவிழாவிற்கு வராத மற்ற வாகனங்கள் அனைத்தும், குலசேகரன்பட்டினத்தை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் பெரியதாழை கடற்கரை சாலை வழியாக படுக்கப்பத்து, மணிநகர், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூர் செல்ல வேண்டும் அல்லது கன்னியாகுமரி, உவரி, திசையன்விளை, சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் வழியாக திருச்செந்தூர் செல்ல வேண்டும்.

திருநெல்வேலி - தூத்துக்குடி மார்க்கமாக திருச்செந்தூர் வழியாக குலசேகரன்பட்டினம் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும், திருச்செந்தூர் இரும்பு ஆர்ச், மேல ரதவீதி, முருகாமடம் சந்திப்பு (தெப்பகுளம்), ஆலந்தலை, கல்லாமொழி வழியாக குலசேகரன்பட்டினம் வடக்கூர் கடற்கரை பைபாஸ் கார்த்திகேயன் காம்ப்ளக்ஸ் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும் போது அதே வழித்தடம் வழியாக திருச்செந்தூர் முருகாமடம் வந்து அரசு மருத்துவமனை பின்புறம் வழியாக திருச்செந்தூர் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

திசையன்விளை - தட்டார்மடம் - சாத்தான்குளம் - மெஞ்ஞானபுரம் மார்க்கத்திலிருந்து குலசேகரன்பட்டினம் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி வழியாக தேரியூர் ஊருக்குள் வந்து, செட்டியாபத்து - கூழையன்குண்டு விலக்கு, உடன்குடி சத்தியமூர்த்தி பஜார் ஜங்ஷன், ஆர்எஸ்யூஎஸ் மஹால் சந்திப்பு, உடன்குடி பேருந்து நிலையம், வில்லிக்குடியிருப்பு சந்திப்பு வழியாக குலசேகரன்பட்டினம் கடற்கரை பைபாஸ் சந்திப்பு தருவைகுளம் அருகில் பிரியா கேஸ் குடோன் எதிர்புறம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்ல வேண்டும்.

கன்னியாகுமரி - உவரி, பெரியதாழை, மணப்பாடு மார்க்கமாக வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் குலசேகரன்பட்டினம் தெற்கு பகுதி கடற்கரை பைபாஸ் சாலை தீதத்தாபுரம் சந்திப்பு அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்ல வேண்டும்.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் வாகனங்களில் சிரமமின்றியும், போக்குவரத்து நெரிசலின்றியும், பாதுகாப்பாக வந்து செல்வதற்கு சில வழிப்பாதைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு குலசேகரன்பட்டினம் உடன்குடி சாலையில் தருவைகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 19 வாகன நிறுத்தங்களும் மற்றும் குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதி மணப்பாடு சாலையில் 10 வாகன நிறுத்தங்களும் சேர்த்து மொத்தமாக 29 வாகன நிறுத்தங்கள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் நிறுத்தாமலும், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் ஏனோ, தானோ என்று வாகனங்களை நிறுத்தாமலும், வாகனத்தை சுற்றி கொட்டகை அமைக்காமலும், மற்ற வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக காவலர்கள் குறிப்பிடும் இடத்தில் வரிசையாக வாகனங்களை நிறுத்தி காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தூத்துக்குடி மார்க்கமாக திருச்செந்தூர் வழியாக குலசேகரன்பட்டினம் வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் திருச்செந்தூர் மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், மேலரதவீதி, முருகாமடம் (தெப்பக்குளம்) வழியாக பரமன்குறிச்சி, தண்டுபத்து, உடன்குடி சிதம்பரதெரு சந்திப்பு வந்து, பின்பு உடன்குடி ஆர்எஸ்யூஎஸ் மஹால் சந்திப்பு, உடன்குடி பேருந்து நிலையம், வில்லிகுடியிருப்பு சந்திப்பு வழியாக குலசேகரபட்டினம் தருவைகுளத்தை சுற்றியுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

மேற்கண்ட பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில் தேவைக்கேற்ப மாற்றுப்பாதையாக, உடன்குடி சிதம்பரா தெருவிலிருந்து வடக்கு காலன் குடியிருப்பு வழியாக உடன்குடி பேருந்து நிலையம், வில்லிகுடியிருப்பு, புதுமனைப் பள்ளிவாசல் தெரு, சமத்துவநகர் வழியாக குலசேகரன்பட்டினம் தருவைகுளத்தை சுற்றியுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

வாகனங்கள் வாகன நிறுத்துமிடங்களில் இருந்து திரும்பிச் செல்லும்போது குலசேகரன்பட்டினம் கடற்கரை உடன்குடி பைபாஸ் ஜங்ஷனுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட வாகனங்கள் தருவைக்குளத்தை சுற்றி குலசேகரன்பட்டினம் கடற்கரை பைபாஸ் கருங்காளியம்மன் ஜங்ஷன் வந்து குலசேகரன்பட்டினம் வடக்கூர் கடற்கரை பைபாஸ், கல்லாமொழி, ஆலந்தலை, திருச்செந்தூர் முருகாமடம் (தெப்பகுளம்), திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் வழியாக திருநெல்வேலி ரோடு காந்திபுரம், இராணி மஹாராஜபுரம் வழியாக அடைக்கலாபுரம், அறுமுகநேரி, ஆத்தூர் மார்க்கமாக தூத்துக்குடி செல்லவும். அல்லது இராணி மஹாராஜபுரம், அம்மன்புரம், நல்லூர் விலக்கு, னுஊறு, ஆத்தூர் மார்க்கமாக தூத்துக்குடி செல்ல வேண்டும்.

மேற்கண்ட பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்பட்சத்தில் தேவைக்கேற்ப மாற்றுப்பாதையாக ஆலந்தலையில் இருந்து என். முத்தையாபுரம் விலக்கு, செந்தூர் மினரல்ஸ் (பரமன்குறிச்சி ரோடு சந்திப்பு), நடுநாலு மூலைக்கிணறு விலக்கு வழியாக திருநெல்வேலி ரோடு காந்திபுரம் வந்து இராணிமஹாராஜபுரம் வழியாக அடைக்கலாபுரம், அறுமுகநேரி, ஆத்தூர் மார்க்கமாக தூத்துக்குடி செல்லவும் அல்லது இராணி மஹாராஜபுரம், நல்லூர் விலக்கு, ஆத்தூர் மார்க்கமாக தூத்துக்குடி செல்ல வேண்டும்.

திருநெல்வேலி மார்க்கமாக வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் குரும்பூர், நல்லூர் விலக்கு, காந்திபுரம் வந்து வலதுபுறமாக திரும்பி காயாமொழி விலக்கு, பரமன்குறிச்சி, தண்டுபத்து, உடன்குடி சிதம்பராதெரு சந்திப்பு வந்து பின்பு உடன்குடி ஆர்எஸ்யூஎஸ் மஹால் சந்திப்பு, உடன்குடி பேருந்து நிலையம், வில்லிகுடியிருப்பு சந்திப்பு வழியாக குலசேகரன்பட்டினம் தருவைகுளத்தை சுற்றியுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

மேலும் மேற்கண்ட பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்பட்சத்தில் தேவைக்கேற்ப மாற்றுப்பாதையாக உடன்குடி சிதம்பராதெருவிலிருந்து வடக்கு காலான்குடியிருப்பு வழியாக உடன்குடி பேருந்து நிலையம், வில்லிகுடியிருப்பு, புதுமனைப் பள்ளிவாசல் தெரு, சமத்துவநகர் வழியாக குலசேகரன்பட்டினம் தருவைகுளத்தை சுற்றியுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

வாகன நிறுத்துமிடங்களில் இருந்து திரும்பிச் செல்லும் போது குலசேகரன்பட்டினம் கடற்கரை உடன்குடி பைபாஸ் ஜங்ஷனுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட வாகனங்கள் தருவைக்குளத்தை சுற்றி குலசேகரன்பட்டினம் கடற்கரை பைபாஸ், கருங்காளியம்மன் கோவில் ஜங்ஷன் வந்து குலசேகரன்பட்டினம் வடக்கூர் இசிஆர் நுஊசு பைபாஸ், கல்லாமொழி, ஆலந்தலை, திருச்செந்தூர் முருகாமடம் (தெப்பகுளம்), திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் வழியாக திருநெல்வேலி ரோடு காந்திபுரம், இராணி மஹாராஜபுரம், அம்மன்புரம், நல்லூர் விலக்கு, குரும்பூர் வழியாக திருநெல்வேலி செல்லவும்.

மேலும் மேற்கண்ட பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்பட்சத்தில் தேவைக்கேற்ப மாற்றுப்பாதையாக ஆலந்தலையிலிருந்து என்.முத்தையாபுரம் விலக்கு, செந்தூர் மினரல்ஸ் (பரமன்குறிச்சி ரோடு சந்திப்பு), நடுநாலுமூலைக்கிணறு விலக்கு வழியாக திருநெல்வேலி ரோடு காந்திபுரம் வந்து இராணிமஹாராஜபுரம், அம்மன்புரம், நல்லூர் விலக்கு, குரும்பூர் வழியாக திருநெல்வேலி செல்லவும்.

மெஞ்ஞானபுரம் மார்க்கமாக வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் செட்டியாபத்து - கூழையன்குண்டு விலக்கு, உடன்குடி சத்தியமூர்த்தி பஜார் ஜங்ஷன், ஆர்எஸ்யூஎஸ் மஹால் சந்திப்பு, உடன்குடி பேருந்து நிலையம், வில்லிகுடியிருப்பு சந்திப்பு வழியாக வந்து குலசேகரபட்டினம் தருவைகுளத்தை சுற்றியுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

மேலும் மேற்கண்ட பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்பட்சத்தில் தேவைக்கேற்ப மாற்றுப்பாதையாக வில்லிகுடியிருப்பு, புதுமனைப் பள்ளிவாசல் தெரு, சமத்துவநகர் வழியாக குலசேகரன்பட்டினம் தருவைகுளத்தை சுற்றியுள்ள வாகனம் நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். மேற்கண்ட வாகனங்கள் வாகன நிறுத்தமிடங்களில் இருந்து திரும்பிச் செல்லும்போது குலசேகரன்பட்டினம் இசிஆர் உடன்குடி பைபாஸ் ஜங்ஷனுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது.

மேற்கண்ட வாகனங்கள் கொட்டங்காடு, தாங்கையூர் கைலாசபுரம், தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி வழியாக செட்டியாபத்து அல்லது வேப்பங்காடு வழியாக மெஞ்ஞானபுரம் செல்ல வேண்டும்.

சாத்தான்குளம் மார்க்கமாக வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் பன்னம்பாறை, வேப்பங்காடு, தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி வழியாக தேரியூர் ஊருக்குள் வந்து, செட்டியாபத்து - கூழையன்குண்டு விலக்கு, உடன்குடி சத்தியமூர்த்தி பஜார் ஜங்ஷன், ஆர்எஸ்யூஎஸ் மஹால் சந்திப்பு, உடன்குடி பேருந்து நிலையம், வில்லிகுடியிருப்பு சந்திப்பு வழியாக குலசேகரபட்டினம் தருவைகுளத்தை சுற்றியுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

மேலும் மேற்கண்ட பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்பட்சத்தில் தேவைக்கேற்ப மாற்றுப்பாதையாக வில்லிகுடியிருப்பு, புதுமனைப் பள்ளிவாசல் தெரு, சமத்துவநகர் வழியாக குலசேகரபட்டினம் தருவைகுளத்தை சுற்றியுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். மேற்கண்ட வாகனங்கள் வாகன நிறுத்தமிடங்களில் இருந்து திரும்பிச் செல்லும்போது குலசேகரன்பட்டினம் இசிஆர் உடன்குடி பைபாஸ் ஜங்ஷனுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட வாகனங்கள் கொட்டங்காடு, தாங்கையூர் கைலாசபுரம், தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி, வேப்பங்காடு, பன்னம்பாறை வழியாக சாத்தான்குளம் செல்ல வேண்டும்.

திசையன்விளை மார்க்கமாக வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் தட்டார்மடம், காந்திநகர், மணிநகர், பள்ளக்குறிச்சி, ராமசாமி தர்மாபுரம் விலக்கு, கந்தபுரம் விலக்கு, மூன்றுபனை சந்திப்பு (வேதக்கோட்டை விளை ரோடு), தீதத்தாபுரம் விலக்கு வழியாக வந்து குலசேகரன்பட்டினம் இசிஆர் மணப்பாடு சாலையிலுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

மேற்கண்ட வாகனங்கள் வாகன நிறுத்தமிடங்களில் இருந்து திரும்பிச் செல்லும்போது குலசேகரன்பட்டினம் நுஊசு உடன்குடி பைபாஸ் ஜங்ஷனுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட வாகனங்கள் தீதத்தாபுரம் விலக்கு, மூன்றுபனை சந்திப்பு (வேதக்கோட்டை விளை ரோடு), கந்தபுரம் விலக்கு, ராமசாமி தர்மாபுரம் விலக்கு, பள்ளக்குறிச்சி, மணிநகர், காந்திநகர், தட்டார்மடம் வழியாக திசையன்விளை செல்ல வேண்டும்.

கன்னியாகுமரி மார்க்கமாக வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் உவரி, பெரியதாழை, மணப்பாடு வழியாக குலசேகரபட்டினம் இசிஆர் மணப்பாடு சாலையிலுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்தவும். மேற்கண்ட வாகனங்கள் வாகன நிறுத்தமிடங்களில் இருந்து திரும்பிச் செல்லும்போது குலசேகரன்பட்டினம் நுஊசு உடன்குடி பைபாஸ் ஜங்ஷனுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட வாகனங்கள் மணப்பாடு, பெரியதாழை, உவரி வழியாக கன்னியாகுமரி செல்ல வேண்டும்.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் திறந்தவெளி வாகனங்களிலும், ஒலி பெருக்கி பொருத்தப்பட்டுள்ள வாகனங்களிலும் வருவதற்கும் அனுமதியில்லை. பொது போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அமைக்க அனுமதியில்லை. குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த, காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன நிறுத்தங்கள் தவிர சாலைகளிலோ, சாலை ஓரங்களிலோ, வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை.

கோயிலுக்கு வரும் தசரா குழுக்கள் ஒரு வழிப்பாதையாக குலசேகரன்பட்டினம் இசிஆர் பைபாஸ் ரோடு, கருங்காளியம்மன் கோவில் சந்திப்பு, தாயம்மாள் பள்ளி சந்திப்பு, போஸ்ட் ஆபீஸ் வழியாக கோவில் முன்பகுதி வந்து கோவிலுக்கு செல்ல வேண்டும். கடற்கரைக்கு செல்பவர்கள் கோயில் முன் பகுதி வழியாக மடப்பள்ளி வந்து கோயில் கிழக்கு பகுதி வழியாக கடற்கரைக்கு செல்ல வேண்டும். மேலும் தீச்சட்டி எடுத்து வரும் பக்தர்கள் நேராக மடப்பள்ளி, கோவில் கிழக்கு பகுதி வழியாக கடற்கரை பூங்கா அருகிலுள்ள தீச்சட்டி வைக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும்.

கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஒரு வழிப்பாதையாக குலசேகரன்பட்டினம் இசிஆர் பைபாஸ் சந்திப்பு ரத்தினகாளியம்மன் கோவில், திருவருள்பள்ளி, தெற்கு தெரு, காவலர் குடியிருப்பு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக கோயில் முன்பகுதி வந்து கோயில் தரிசனத்திற்கோ அல்லது கடற்கரைக்கோ செல்ல வேண்டும். கோயில் தரிசனம் முடித்து வெளியே செல்லும் பக்தர்கள் கோவில் மேற்கு பக்க வாசல் (ஆர்ச்) வழியாக வெளியே வந்து, காவல் நிலையம், சகாயம் பெட்ரோல் பல்க் (இந்தியன் ஆயில்) வழியாக குலசேகரன்பட்டினம் இசிஆர் உடன்குடி பைபாஸ் ரோடு சந்திப்பு வந்து செல்ல வேண்டும்.

கடற்கரையிலிருந்து வெளியே செல்லும் பக்தர்கள் சிதம்பரேஸ்வரர் கோவில், ரைஸ்மில் ஜங்ஷன், கச்சேரி தெரு, குலசேகரன்பட்டினம் காவல் நிலையம், சகாயம் பெட்ரோல் பல்க் (இந்தியன் ஆயில்) வழியாக குலசேகரன்பட்டினம் உடன்குடி பைபாஸ் ரோடு சந்திப்பு வந்து செல்ல வேண்டும் அல்லது குலசேகரன்பட்டினம் தெற்கு பகுதிக்கு செல்பவர்கள் ரைஸ்மில் ஜங்ஷனிலிருந்து மீன் கடை பஜார், அசன்யா பள்ளி ஜங்ஷன் வழியாக வந்து குலசேகரன்பட்டினம் இசிஆர் தெற்கு பைபாஸ் மணப்பாடு சாலைக்கு செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!