திருச்செந்தூர் நகராட்சி கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த தி.மு.க. கவுன்சிலர்

திருச்செந்தூர் நகராட்சி கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த தி.மு.க. கவுன்சிலர்
X

திருச்செந்தூர் நகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தி.மு.க. கவுன்சிலர் ஆனந்த ராமச்சந்திரன்.

திருச்செந்தூர் நகராட்சி அவசர கூட்டத்திற்கு தி.மு.க. கவுன்சிலர் கருப்புச்சட்டை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொத்து வரி, வீட்டு வரி உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைகளில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியில் அரசு அறிவித்தபடி வீட்டு வரி, சொத்து வரி, உயர்த்தபடவில்லை.

ஆனால், அதற்கு பதிலாக மற்ற நகராட்சிகளை ஒப்பிடுகையில் கூடுதலாக நான்கு மடங்கு வரிகள் உயர்த்தப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர். இந்த வரி உயர்வை கண்டித்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் நகராட்சி பகுதிகளில் சுமார் 25 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்தநிலையில், திருச்செந்தூர் நகராட்சியின் 16 ஆவது வார்டு தி.மு.க கவுன்சிலரும், வரிவிதிப்பு குழு உறுப்பினருமான ஆனந்த ராமச்சந்திரன் இன்று நடைபெற்ற அவசர வரிவிதிப்பு கூட்டத்திற்கு கருப்புச்சட்டை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் வரி விதிப்பு உயர்வு, நகராட்சி பகுதிகளில் நிலவும் குடிதண்ணீர் பிரச்சினை குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் பங்கேற்க கறுப்பு சட்டை அணிந்து வந்ததாக கவுன்சிலர் ஆனந்த ராமச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும், திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் அமைச்சர் மற்றும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்து வருவதாகவும் குற்றம் சாட்டிய கவுன்சிலர் ஆனந்த ராமச்சந்திரன் வரியை குறைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார். தி.மு.க.வைச் சேர்ந்த தலைவராக உள்ள நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவரை கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!