சிறுமியின் கண் மருத்துவ சிகிச்சைக்கு உதவி: கனிமொழி எம்.பி. உறுதி!

சிறுமியின் கண் மருத்துவ சிகிச்சைக்கு உதவி: கனிமொழி எம்.பி. உறுதி!
X

பார்வை குறைபாடு கொண்ட சிறுமி ரேவதியுடன் கனிமொழி எம்.பி.

திருச்செந்தூர் அருகே வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்த இடத்தில் கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியைக் கண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அந்த சிறுமியின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவுவதாக உறுதியளித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. மேலும், ஆங்காங்கே துண்டிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணியும், உடைப்பு ஏற்பட்ட குளங்களில் மறுசீரமைப்பு பணியும் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 21 ஆம் தேதி முதல் மீட்பு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் மேலாத்தூர் - சொக்கப்பழங்கரை ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அந்தப் பகுதி மக்களிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து அவர் கேட்டறிந்தார். கிராமத்தில் வசித்து வரும் மக்கள் வெள்ளத்தால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாக தெரிவித்தனர். இந்த கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் இருக்கும் நிலையில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

சொக்கப்பழங்கரை கிராமத்தில் வெள்ள பாதிப்பை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, கண் பார்வை குறைபாடுள்ள சிறுமி ஒருவரை கண்டார். இதையெடுத்து, அந்த சிறுமியிடம் சென்று கனிமொழி எம்.பி. விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் ஏழாம் வகுப்பு படித்து வருவதாகவும், தனக்கு கண் பார்வை பிரச்னை இருப்பதாகவும். அதற்கு மருத்துவச் சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கூறினார். இதையெடுத்து, அந்த சிறுமிக்கு உடனடியாக, கண் மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகக் கனிமொழி எம்.பி உறுதியளித்தார்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself