திமுக தலைவர் பொறுப்பேற்பு -இளைஞரணி சார்பில்  அன்னதானம்.

திமுக தலைவர் பொறுப்பேற்பு -இளைஞரணி சார்பில்  அன்னதானம்.
X
#DMK leader takes charge - #Annathanam on behalf of the #youth.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டதை முன்னிட்டு திருச்செந்தூரில் திமுக இளைஞரணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதனை தமிழகம் முழுவதும் கட்சியினர் எளிமையாக கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதை முன்னிட்டு திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதை முன்னிட்டும் திமுக இளைஞரணி சார்பில் நகர்ப்பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் மணல்மேடு சுதாகர் தலைமையில், ஆதரவற்றோர்களுக்கு மதிய விருந்து வழங்கப்பட்டது. சன்னதி தெருவில் உள்ள சாது சிவானந்த குருகுலத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. அதனையடுத்து அமலிநகரில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது