திருச்செந்தூர் முருகன் கோயிலில் செப் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செப் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை
X

திருசெந்தூர் முருகன் கோவில்

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் செப் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என கலெக்டர் அறிவிப்பு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளைமுதல் செப் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என தூத்துக்குடி கலெக்டர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆவணி திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால், கொரோனா பரவலைத் தடுக்க திருச்செந்தூர் முருகன் கோயிலில் செப் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆவணி திருவிழா ஆகம விதிப்படி பக்தரிகளின்றி பணியாளர்கள் மூலம் நடைபெறும் என கூறியுள்ளார்,

தமிழகத்தில் உள்ள கோயில்களில் கொரோனா காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறுகிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!