திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு அனுமதி

திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு அனுமதி
X

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பல மாதங்களுக்கு பிறகு கடலில் குளிப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களை அனுமதித்தனர். ஆனால் கடலில் புனித நீராடவும் பக்தர்களை அனுமதிக்கவில்லை. அங்கு இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்தனர்.இந்நிலையில் சென்னை மெரினா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லவும், குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் குளிக்கவும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து திருச்செந்தூர் கோவில் கடலில் நேற்று பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!