பைக் திருடும் கும்பல் நடமாட்டம் - பொதுமக்கள் புகார்

பைக் திருடும் கும்பல் நடமாட்டம் - பொதுமக்கள் புகார்
X

சாத்தான்குளத்தில் பைக் திருடும் கும்பல் நடமாடி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் நாளுக்கு நாள் பைக் உள்ளிட்ட இதர வாகனகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வாகனங்கள் அத்தியாவசிய பொருளாகவும் மாறி வருகிறது. சாத்தான்குளத்தில் கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர் கையில் 10க்கு மேற்பட்ட சாவியுடன் வந்துள்ளார். தச்சமொழி உள்ள ஹோட்டல் அருகில் நின்ற பைக் ஒன்றை கள்ள சாவி போட்டு அவர் எடுத்து செல்ல முயன்றதாக கூறபப்படுகிறது. இதனை அருகில் இருந்தவர்கள் கவனித்து அவரை விசாரித்தில் அவர் நெல்லை மாவட்டம் சேர்மாதேவி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார்.

உடன் பொதுமக்கள் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தகவல் தெரிித்துள்ளனர். கடந்த 6மாத்திற்கு முன்பு சாத்தான்குளம் பகுதியிலும், கடந்த 2மாத்திற்கு முன்பு பேய்க்குளம் பகுதியிலும் பைக் திருட்டு நடந்துள்ளது. அதில் பொதுமக்கள் பைக் திருடர்கள் சிலரை போலீஸாரிடம் பிடித்தும் கொடுத்துள்ளனர். ஆதலால் பைக் திருட்டு நிகழாமல் இருக்க போலீஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு