திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்துச் செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.
திருச்செந்தூர் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாரம், கந்சசஷ்டி விழா மற்றும் ஆவணித் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது உண்டு. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1-30 மணிக்கு விஷ்வரூப தீபாராதனையுன், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.
பின்னர் கோயில் உள் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதனையடுத்து கொடி மரத்திற்கு பால் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. இதனை அடுத்து மகா தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த ஆவணி திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக ஐந்தாம் திருளான 8 ஆம் தேதி குடவருவாயல் தீபாராதனையும், 7 ஆம் திருநாளான 10 ஆம் தேதி சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்திலும், 8 ஆம் திருநாளான 11 ஆம் தேதி பச்சைசாத்தி கோலத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. மேலும் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13 ஆம் தேதி நடக்கிறது. இத்திருவிழா அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன்,கோயில் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu