கழிவுநீரை பயன்படுத்தி கால்நடை தீவன பயிர் உற்பத்தி செய்யும் திட்டம் துவக்கம்

கழிவுநீரை பயன்படுத்தி கால்நடை தீவன பயிர் உற்பத்தி செய்யும் திட்டம் துவக்கம்
X

கால்நடை தீவன பயிர் உற்பத்தி செய்யும் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக திருச்செந்தூர் நகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பயன்படுத்தி கால்நடை தீவன பயிர் உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் முதல்முறையாக திருச்செந்தூர் நகராட்சி ஆலந்தலையில் நகராட்சி குப்பை கிடங்கினை சுத்தப்படுத்தி அங்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பயன்படுத்தி கால்நடை தீவன பயிர் உற்பத்தி செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தத் திட்டத்தை மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இன்று கனிமொழி எம்.பி. துவக்கி வைத்தார். தொடர்ந்து, கனிமொழி எம்.பி. தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டில் முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக திருச்செந்தூர் வட்டம், தோப்பூரில் அமைந்துள்ள கழிவு நீரேற்று நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரினை சுமார் 4.5 கி.மீ. தூரத்திற்கு பைப் மற்றும் மின் மோட்டார் மூலம் ஆலந்தலை வள மீட்பு பூங்காவிற்கு கொண்டு சென்று சுமார் 10 ஏக்கர் நிலத்தில் கால்நடை பசுந்தீவன பயிர்களான கம்புரேப்பியர் ஒட்டுப்புல் வேலி மசால் கோ.எப்.எஸ்.29 தீவனசோளம் மற்றும் பசுந்தீவன மரங்கள் வளர்ப்பதற்கான திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் திருச்செந்தூர் நகராட்சி, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைந்து நிறைவேற்றப்படுகிறது. இந்த வள மீட்பு பூங்காவில் உற்பத்தி செய்யப்படும் கால்நடை தீவனங்கள் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ. ஆனந்தி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருசந்திரன், நகராட்சி துணைத் தலைவர் ரமேஷ், திருச்செந்தூர் வட்டாட்சியர் வாமணன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர் ஜோசப்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!