திரைக்கலைஞர்கள் உடல் நலன்களை கவனித்துக் கொள்ள வேண்டும்: பாடகர் வேல்முருகன் அறிவுறுத்தல்

திரைக்கலைஞர்கள் உடல் நலன்களை கவனித்துக் கொள்ள வேண்டும்: பாடகர் வேல்முருகன் அறிவுறுத்தல்
X

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாடகர் வேல்முருகன் தரிசனம் செய்தார்.

திரைக்கலைஞர்கள் குறிப்பிட்ட வயதிற்கு பின்பு தங்கள் உடல் நலன்னை பார்த்துக் கொள்ள வேண்டும் என, திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் தெரிவித்தார்.

தமிழ் திரையுலகில் ஒரு மாற்றத்தை உருவாக்கிய சுப்பிரமணியபுரம் படத்தில் இடம்பெற்றுள்ள மதுர.. குலுங்க.. குலுங்க.. என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் பின்னணிப் பாடகர் வேல்முருகன். தொடர்ந்து, திரையுலகில் பல்வேறு ஹிட் பாடல்களை பாடி உள்ளார்.

இந்நிலையில், திரைப்பட பின்னணி பாடகரும், நடிகருமான வேல்முருகன் இன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். கடலில் கால் நனைத்த பின்னர், கோயிலுக்குள் சென்ற அவர் மூலவர், சண்முகர், சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார்.

சுவாமி தரிசனத்துக்குப் பிறகு பாடகர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தபோது முருகன் பாடல் பாடி பேட்டியை தொடங்கினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

வெள்ளித்திரையும், சின்னத்திரையும் அழுத்தமான துறை அல்ல. ஆனால், திரைக்கலைஞர்கள் தொடர் பணிகளால் தங்களை மன அழுத்தமாக வைத்துள்ளனர். சின்னத்திரைகளில் சூட்டிங் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காலை 6 மணிக்கே மேக்அப் போட்டு காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்பு கலைஞர்கள் தங்கள் உடல்நலனை பார்த்துக் கொள்ள வேண்டும்.

உயிரிழந்த நடிகர் மாரிமுத்து குடும்பத்துக்கு நல்லது நடக்க முருகனை வேண்டிக் கொள்கிறேன். தொலைக்காட்சி மற்றும் திரைத்துறையில் தற்போது கிராமிய பாடகர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. நடிகர் மிர்ச்சி சிவா இயக்கத்தில் ‘சலூன்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறேன்.

நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் ஆரம்பத்திலேயே ஒரு களத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டார். கடன் வாங்கினாலும், வாங்க விட்டாலும் சரி, நடிகர் சங்கம் கட்டடத்தை கட்டி முடித்தால் போதும் என்பது எல்லோருடைய எண்ணமாக உள்ளது. இசையமைப்பாளற் ஏ.ஆர். ரகுமான் நிகழ்ச்சியை பார்க்கத் தவறியவர்களை, அடுத்த நிகழ்ச்சியில் முன் வரிசையில் அமர்ந்து பார்ப்பதற்கு ஏ.ஆர். ரகுமான் ஏற்பாடு செய்வார் என நம்பிக்கை உள்ளது என, பாடகர் வேல்முருகன் தெரிவித்தார்.

Next Story
why is ai important to the future