திருச்செந்தூர் அருகே கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு

திருச்செந்தூர் அருகே கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு
X

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாராயணகுமார் மற்றும் ஷோபனா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

திருச்செந்தூர் அருகே கீரனூரில் நிலப் பிரச்னை காரணமாக கணவன் மற்றும் மனைவி அரிவாளால் வெட்டப்பட்டு. படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்செந்தூர் அருகே கீரனூரில் நிலப் பிரச்னை காரணமாக கணவன் மற்றும் மனைவி அரிவாளால் வெட்டப்பட்டு. படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் கீரனூரைச் சேர்ந்தவர் நாராயணகுமார் (44). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவரின் சித்திக்கும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி நாராயணகுமாரை சங்கரலிங்கம் தரப்பினர் தாக்கி அவரிடம் இருந்த தங்கச் செயினை பறித்துச் சென்றதாக நாராயணகுமார் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். ஆனால் போலீசார் இந்த புகாரை முறையாக விசாரிக்காமல் தாமதித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சங்கரலிங்கம் உட்பட 3 பேர் நேற்று இரவு திடீரென நாராயணகுமாரின் வீட்டுக்குள் புகுந்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். அதனை தடுக்கச் சென்ற நாராயணகுமாரின் மனைவி ஷோபனாவுக்கும் கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

அரிவாளால் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்த கணவன் மனைவி இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாராயணகுமார் மற்றும் அவரது மனைவி ஷோபனாவிடமும் போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!