கானம் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா

கானம் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா
X

கானம் டவுன் பஞ்.,சில் நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள்.

கானம் டவுன் பஞ்.,சில் கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா அமைதியான முறையில் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளகானம் டவுன் பஞ்.,சில் மொத்தம் உள்ள 12 வார்டுக்கு 38 பேர் போட்டியிட்டனர். இதில் திமுக 7 இடங்களையும், அதிமுக 4 இடங்களையும், பாஜ ஒரு இடத்தையும் கைப்பற்றியது. தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கும் விழா கானம் டவுன் பஞ்., அலுவலகத்தில் நடந்தது. செயல் அலுவலர் வேல்சாமி தலைமை வகித்து வெற்றி பெற்றவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் 1வது வார்டு பூவதி அம்மாள்(பாஜ), 2வது வார்டு அருள் செல்வி(திமுக), 3வது வார்டு செல்வ ஷீலா(திமுக), 4வது வார்டு அந்தோணி காட்வின்(திமுக), 5வது வார்டு கோமதி(அதிமுக), 6வது வார்டு அன்னபுஷ்பம்(திமுக), 7வது வார்டு காண்டீபமுத்து(அதிமுக), 8வது வார்டு அம்சா(அதிமுக), 9வது வார்டு செந்தமிழ்சேகர்(அதிமுக), 10வது வார்டு வெங்கடேஸ்வரி(திமுக), 11வது வார்டு பால்ராஜ்(திமுக), 12வது வார்டு சாந்தி(திமுக) ஆகியோர் கவுன்சிலராக பதவியேற்றுக்கொண்டனர். இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மாரிமுத்துராஜன், செல்வன், அலுவலர்கள், கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை குரும்பூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!