திருச்செந்தூரில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்

திருச்செந்தூரில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்
X
திருச்செந்தூரில் இன்று மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மாசித்திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய திருவிழாவான 7ம் திருவிழாவான 13ம் தேதி சாமி சிவப்பு சாத்தி சப்பரத்தில் எழுந்தருளினார். 8ம் திருவிழாவான 14ம் தேதி சுவாமி பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து முக்கிய திருவிழாவான தேரோட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

முதலில் பிள்ளையார் தேர் நான்கு ரதவீதிகளிலும் இழுக்கப்பட்டு நிலையை வந்தடைந்தது. அதனைத்தொடர்ந்து குமரவிடங்க பெருமான் பெரிய தேரில் நான்கு ரதவீதிகளில் வந்தார். இதில் நெல்லை, கன்னியாக்குமரி, நாமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது.

Tags

Next Story
ai in future agriculture