அனிதா ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்

அனிதா ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்
X

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன்,தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இதை முன்னிட்டு தனது வேட்புமனுவை அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார். தூத்துக்குடி தொகுதி எம்.பி,. கனிமொழி முன்னிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் சப்கலெக்டர் தன பிரியாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் உடனிருந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ளது.

மத்திய அரசுக்கு கைப்பாவையாக அதிமுக அரசு செயல்பட்டு தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்துள்ளது. தமிழகத்தை மீட்க திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அனிதா ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தை கனிமொழி எம்பி துவங்கி வைத்தார்.

Tags

Next Story