திருச்செந்தூர் கோவில் செயல் அலுவலர் பொறுப்பேற்பு

திருச்செந்தூர் கோவில் செயல் அலுவலர் பொறுப்பேற்பு
X

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செயல் அலுவலராக விஷ்ணு சந்திரன் பொறுப்பேற்று கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் விஷ்ணுசந்திரனை திருச்செந்தூர் முருகன் திருக்கோவில் செயல் அலுவலராக நியமத்து கடந்த ஜன.27-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து விஷ்ணுசந்திரன் இன்று திருக்கோவிலில் மூலவர், சண்முகர் உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செயல் அலுவலராக பொறுப்பேற்று கொண்டார். இவர் கடந்த 2018 முதல் பரமக்குடி மற்றும் நாகர்கோவிலில் சார் ஆட்சியராகவும், 2019 முதல் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare