காவலர் கொலை : கொலையாளி நீதிமன்றத்தில் சரணடைந்தார்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாழவல்லான் பகுதியைச் சேர்ந்த முருகவேல் என்பவர் நேற்று இரவு 10 மணி அளவில் குடிபோதையில் ஏரல் பஜார் பகுதியில் தகராறில் ஈடுபட்டுள்ளார் அவரை அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் சத்தம் போட்டு
வீட்டுக்கு அனுப்பி உள்ளனர் இந்தநிலையில் இரவு சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் பாலு மற்றும் ஒரு காவலர் ஆகியோர் வாழவல்லான் பகுதிக்கு வந்தபோது முருகவேல் அப்பகுதியில் நின்று மீண்டும் தகராறு செய்து கொண்டிருந்ததை பார்த்து வீட்டுக்கு போய் படுக்க கூறியுள்ளனர் இதனால் கோபமடைந்த முருகவேல் உதவி ஆய்வாளர் பாலு மற்றும் காவலர் ஆகியோர் சென்ற இருசக்கர வாகனத்தை தனது உரிமையாளருக்கு சொந்தமான குட்டி யானை என்று அழைக்கப்படக்கூடிய சிறிய வகை லாரி வாகனத்தின் மூலம் வேகமாக பின்னே வந்து பிடித்து தள்ளியுள்ளார் இதில் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தின் பின்னால் இருந்த உதவி ஆய்வாளர் பாலு கீழே விழுந்ததில் அருகில் இருந்த திண்டில் தலை பட்டு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியாகியுள்ளார் இறந்த உதவி ஆய்வாளர் க்கு ஒரு ஆண், ஒரு பெண், பேச்சியம்மாள் என்ற மனைவியும் உள்ளனர் இவர் முடிவைத்தானேந்தல் பகுதியை சேர்ந்தவர். இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற காவலர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் வேண்டுமென்றே கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பின்னால் வந்து இடித்து தள்ளி கொலை செய்த முருகவேளை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் கோவில்பட்டி
அருகே உள்ள விளாத்திகுளம் நீதிமன்றத்தில் கொலையாளி முருகவேல் சரணடைந்தார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் அருகே சாயர்புரம் பண்டாரவிளை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற காவலர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட நிகழ்வு நடந்த நிலையில், தற்போது சிறிய வகை லாரி குட்டி யானையை வைத்து உதவி ஆய்வாளரை கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu