திருச்செந்தூரில் கடலில் நீராட பக்தர்களுக்குத் தடை

திருச்செந்தூரில் கடலில் நீராட பக்தர்களுக்குத் தடை
X

திருச்செந்தூரில் இன்றும் நாளையும் கடலில் நீராட பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2020 ம் ஆண்டு இன்றுடன் முடிந்து நாளை புத்தாண்டு 2021 பிறக்க உள்ளது. எனவே புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபட வரும் பக்தர்கள், கடலில் நீராடி கோயிலுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்றும் நாளையும் கோயில் கடற்கரைக்குச் செல்லவோ, கடலில் புனித நீராடவோ பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் வழக்கம்போல கோயிலில் சுவாமி தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture