எனது ஓட்டை திமுவுக்கு பதிவு செய்தார்: உறவினர் மீது மூதாட்டி புகார்

எனது  ஓட்டை திமுவுக்கு பதிவு செய்தார்: உறவினர் மீது மூதாட்டி புகார்
X

முதாட்டியை வாக்களிக்கவிடாமல் தடுத்து அவரது வாக்கை திமுகவுக்கு பதிவு செய்ததாக எழுந்த புகாரால் சோனகன்விளை அரசு நடுநிலைப்பள்ளியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர் அருகே மூதாட்டியை வாக்களிக்க விடாமல் அவரது ஓட்டை திமுகவுக்கு பதிவு செய்த உறவினரால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நேற்று நடந்தது. இதேபோல் திருச்செந்தூர் தாலுகா கானம் பேரூராட்சியில் 12 வார்டுகளுக்கு மொத்தம் 38 பேர் போட்டியிடுகின்றனர். காலை முதல் மாலை வரை வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில் கானம் 2 மற்றும் 4வது வார்டு வாக்குச்சாவடியான சோனகன்விளை அரசு நடுநிலைப்பள்ளியில் நடக்க முடியாத மூதாட்டி ஒருவரை அவரது உறவினர் ஒருவர் அழைத்து வந்திருந்தார். அவரை வாக்குச்சாவடியில் உள்ள உதவியாளர் உதவியுடன் வாக்களிக்கும் இயந்திரம் உள்ள இடத்திற்கு அழைத்து சென்றார். உதவியாளர் வெளியே வந்தவுடன் மூதாட்டியுடன் வந்த உறவினர் ஒருவர் திடீரென பாட்டியை வாக்களிக்க விடாமல் தடுத்து அவரே திமுக வேட்பாளருக்கான பட்டனை அழுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி அங்கிருந்த தேர்தல் அலுவலர்களிடம் நான் அதிமுகவுக்கு வாக்களிக்க இருந்தேன். ஆனால் என்னுடன் வந்த எனது உறவினர் என்னை வாக்களிக்கவிடாமல் அவரே திமுகவுக்கு வாக்களித்துவிட்டார் என்று கூறினார். இதனையடுத்து அங்கு திமுகவினரும், அதிமுகவினரும் கூடினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அந்த உறவினரையும் கண்டித்து அனுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!