திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழா: போக்குவரத்து மாற்றம் குறித்து காவல் துறை அறிவிப்பு
காவல் துறை அறிவித்துள்ள வாகனங்கள் செல்லும் வழித்தட மேப்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா இந்த ஆண்டு 13.11.2023 முதல் 19.11.2023 அன்று வரை நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18.11.2023 அன்று மாலை சுமார் 4 மணியளவில் நடைபெறும்.
19.11.2023 அன்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறும். இந்தத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நாட்களான 17.11.2023 மற்றும் 18.11.2023 ஆகிய நாட்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பக்தர்களின் பாதுகாப்பு வசதியை கருத்தில் கொண்டு போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:
பொது போக்குவரத்து மாற்று வழித்தடங்கள் (Diversion Route):
தூக்துக்குடி, ஆறுமுகநேரி மார்க்கமாக திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் ஆறுமுகநேரி DCW ஜங்ஷன், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி வழியாக செல்லவும். அல்லது வீரபாண்டியன்பட்டிணம் சண்முகபுரம் ரயில்வே கேட், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி வழியாக செல்ல வேண்டும்.
குரும்பூர் மார்க்கத்திலிருந்து திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி வழியாக செல்ல வேண்டும்.
கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் குலசேகரன்பட்டினம், உடன்குடி, பரமன்குறிச்சி, காயாமொழி, காந்திபுரம், ராணிமஹாராஜபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக செல்லவும். அல்லது ஆலந்தலை N.முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம், பரமன்குறிச்சி, காயாமொழி, ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக செல்ல வேண்டும்.
நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் பரமன்குறிச்சி, காயாமொழி, ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக செல்ல வேண்டும்.
அரசு சிறப்பு பேருந்துகள் வந்து செல்லும் வழித்தடங்கள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையம் சம்மந்தமான விபரங்கள்:
தூத்துக்குடி, ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்ல வேண்டும். திருநெல்வேலி, குரும்பூர் வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் திருநெல்வேலி ரோட்டில் உள்ள ஷபி டிரேடர்ஸ் கீழ்புறம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்ல வேண்டும்.
கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் திருச்செந்தூர் தெப்பகுளம் (முருகாமடம்) பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்ல வேண்டும்.
நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம், பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் திருச்செந்தூர் தெப்பகுளம் (முருகாமடம்) பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்ல வேண்டும்.
வாகனங்கள் நிறுத்தும் இடம் சம்மந்தமான விபரங்கள்:
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் வாகனங்களில் சிரமமின்றியும், போக்குவரத்து நெரிசலின்றியும், பாதுகாப்பாக வந்து செல்வதற்கு சில வழிப்பாதைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூத்துக்குடி சாலையில் 5 வாகன நிறுத்தும் இடங்களும், திருநெல்வேலி சாலையில் 6 வாகன நிறுத்தும் இடங்களும், பரமன்குறிச்சி சாலையில் 4 வாகன நிறுத்தும் இடங்களும் மற்றும் திருச்செந்தூர் TB சாலையில் 1 வாகன நிறுத்தும் இடமும் சேர்த்து மொத்தம் 16 வாகன நிறுத்தும் இடங்கள் (Parking Places) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக சாலை ஓரங்களில் நிறுத்தாமலும், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் (Parking) குறுக்கு நெடுக்காக வாகனங்களை நிறுத்தாமல் காவலர்கள் குறிப்பிடும் இடத்தில் வரிசையாக வாகனங்களை நிறுத்தி காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தூத்துக்குடி, ஆறுமுகநேரி மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் தூத்துக்குடி சாலையில் உள்ள ராஜ்கண்ணா நகர் வழியாக J.J.நகர் வாகன நிறுத்துமிடம், சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம், அரசு தொழிற்பயிற்சி பள்ளி (ITI) வளாக வாகன நிறுத்துமிடம், மற்றும் ஆதித்தனார் கல்லூரி மாணவர் விடுதி எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம் ஆகிய வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தி, திரும்ப செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்ல வேண்டும்.
திருநெல்வேலி, குரும்பூர் சாலை மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் திருநெல்வேலி சாலையில் உள்ள Royal Enfield Showroom எதிரே உள்ள சுப்பையா டand வாகன நிறுத்துமிடம், வியாபாரிகள் சங்க வாகன நிறுத்துமிடம், வேட்டையாடும் மடம் வாகன நிறுத்துமிடம், குமரன் Scane Centre எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம், ஆதித்தனார் கல்லூரி பணியாளர் குடியிருப்பு வாகன நிறுத்துமிடம் மற்றும் அருள் முருகன் நகர் வாகன நிறுத்துமிடம் ஆகிய வாகன நிறுத்தமிடங்களில் நிறுத்தி, திரும்ப செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்ல வேண்டும்.
நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் பரமன்குறிச்சி சாலையில் உள்ள FCI குடோன் எதிரே உள்ள சுந்தர் டand வாகன நிறுத்துமிடம், சர்வோதயா சங்கம் அருகில் உள்ள பால்பாயாசம் அய்யர் டand வாகன நிறுத்துமிடம், முருகானந்தம் டand வாகன நிறுத்துமிடம் மற்றும் செந்தில்குமரன் பள்ளி வளாக வாகன நிறுத்துமிடம் ஆகிய வாகன நிறுத்ததுமிடங்களில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்ல வேண்டும்.
கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் ஆலந்தலை, N.முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம் வந்து வலதுபுறம் திரும்பி பரமன்குறிச்சி சாலையில் உள்ள FCI குடோன் எதிரே உள்ள சுந்தர் டand வாகன நிறுத்துமிடம், சர்வோதயா சங்கம் அருகில் உள்ள பால்பாயாசம் அய்யர் டand வாகன நிறுத்துமிடம், முருகானந்தம் டand வாகன நிறுத்துமிடம் மற்றும் செந்தில்குமரன் பள்ளி வளாக வாகன நிறுத்துமிடம் ஆகிய வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்ல வேண்டும்.
வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு பக்தர்கள் கோயில் அருகில் செல்வதற்கு சிறப்பு அரசு நகர பேருந்துகள், மினி பேருந்துகள், வேன்கள் மற்றும் ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வாகனங்கள் திருச்செந்தூர் மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி வழியாக கீழ ரதவீதியிலுள்ள தேரடி அருகில் பக்தர்களை இறக்கிவிட்டு திரும்பி செல்லும்போது அமலிநகர் ஜங்ஷன், தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில் ஜங்ஷன், தெப்பகுளம் (முருகாமடம்) வழியாக செல்லும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu