/* */

திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்கள் போராட்டம் வாபஸ்.. ஆட்சியர் தகவல்...

திருச்செந்தூர் அமலிநகரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் ஆட்சியர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வாபஸ் பெற்றனர்.

HIGHLIGHTS

திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்கள் போராட்டம் வாபஸ்.. ஆட்சியர் தகவல்...
X

தூத்துக்குடியில் அமலிநகர் மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் ஆட்சியர் செந்தில்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அமலிநகரில் கடல் அறிவிப்பை தவிர்த்துடும் வகையில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான பணிகள் தொடங்கப்படாமல் நீடித்து வந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக அமலி நகர் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், திருச்செந்தூர் அமலிநகர் மீனவ சங்கப் பிரதிநிதிகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரையில் 195 படகுகள் உள்ளன. அமலிநகர் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தவிர்த்திடும் நோக்கில் விரைந்து தூண்டில் வளைவு அமைத்திடக்கோரி கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதுதொடர்பாக அமலிநகர் ஊர் கமிட்டி தலைவர், உறுப்பினர்கள், பிரதிநிதிகள், பங்கு தந்தை ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அமலிநகர் பகுதியில் ரூ. 58 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மற்றும் மீன்வளத் துரை அமைச்சர் ஆகியோர் அறிவித்து உள்ளனர்.

மேலும், திருச்செந்தூர் கோயில் பகுதி மற்றும் ஜீவாநகர் பகுதியில் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்பு அமைப்பு கட்டப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் சட்டசபையில் அறிவித்து உள்ளார். தூண்டில் வளைவு அமைக்க கடலோர மேலாண்மை விதிகளை கடைபிடிப்பது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் தீர்வு காண்பதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வழக்கில் தீர்வு கிடைத்தவுடன் விரைவில் தூண்டில் வளைவு மற்றும் கடல் அரிப்பு தடுப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று மீனவ பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் தமிழக அரசு மீது நம்பிக்கை வைத்து வேலை நிறுத்த போராட்டத்தினை கைவிட்டு நாளை இரவு முதல் கடலுக்கு செல்வோம் என உறுதியளித்து உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

சமாதான கூட்டத்தில் தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அமல் சேவியர், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, தூத்துக்குடி மீன் பிடி துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர் சரவணகுமார், தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன், திருச்செந்தூர் வருவாய் வட்டாட்சியர் சுவாமிநாதன், அமலிநகர் மீனவ பிரதிநிதிகளான ஊர் தலைவர் பாஸ்கர், பொருளாளர் குளோரிடான், ஊர் கமிட்டி உறுப்பினர்கள் ராஜா, ஹெருடஸ், .ஆனஸ்டன், அமலிநகர் பங்கு தந்தை வில்லியம் சந்தானம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Feb 2023 2:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  2. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  3. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  4. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  5. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  6. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  7. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  9. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  10. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!