தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
X
தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான மூன்று பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் போக்சோ வழக்குகள் உள்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவோர் பலர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 13.02.2023 அன்று தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ செக்கராக்குடி பகுதியை சேர்ந்த நயினார் மனைவி காந்திமதி (75) என்பவரை கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் கீழ செக்கராக்குடி பகுதியை சேர்ந்தவர்களான சங்கர நயினார் (22) மற்றும் நெல்லையப்பன் (22) ஆகியோரை தட்டப்பாறை காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

மூதாட்டி கொலை வழக்கில் கைதான சங்கர நயினார் மற்றும் நெல்லையப்பன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தட்டாப்பாறை காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு வகிக்கும் வின்சென்ட் அன்பரசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 07.01.2022 அன்று குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன்புரம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரது மனைவி நாகூராள் (85) என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துவிட்டு கொலை செய்த வழக்கில் குரும்பூர் அருள்நாதபுரம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (35) என்பவரை குரும்பூர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

மூதாட்டி கொலை வழக்கில் கைதான பாலசுப்பிரமணியன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு வகிக்கும் ராமகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

இரு காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து, கொலை வழக்குகளில் கைதான கீழ செக்கராக்குடி பகுதியை சேர்ந்தவர்களான சங்கர நயினார் மற்றும் நெல்லையப்பன் மற்றும் குரும்பூர் அருள்நாதபுரம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆகிய மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் கொலை வழக்கில் கைதான மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், மாவட்டத்தில் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
பாஸ்ட் ஃபுட்க்கு செய்ற செலவ  இந்த நட்ஸ் &  ட்ரை ஃப்ரூட்ஸ்க்கு செய்ங்க..! அப்றம் உங்க உடம்புல என்ன ஆகுதுனு பாருங்க..! | Dry fruits and Nuts benefits in tamil