தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் நாளை (ஆக.25) புதன் கிழமை கோவிட் 19 தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கோவிட் 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு 01.04.2021 முதல் 24.08.2021 முடிய மொத்தம் 8,447 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக 25.08.2021 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கீழ்க்;கண்ட இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
தூத்துக்குடி மாநகராட்சி - அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி - தூத்துக்குடி.,மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - பாத்திமா நகர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - கணேஷ் நகர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - திரேஸ்புரம், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - தருவை ரோடு, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - மடத்தூர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - முள்ளக்காடு, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - லூர்தம்மாள்புரம், புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளி - இஞ்ஞாசியார்புரம், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - மில்லர்புரம்.
ஊரக பகுதிகள் - புதுக்கோட்டை வட்டாரத்தில் எம்.புதூர், செட்டியம்பழம், கைலாசபுரம், குலையன்கரிசல், கருங்குளம் வட்டாரத்தில் ஆறாம்பண்னை, மணக்கரை, கொங்கராயன்குறிச்சி, திருச்செந்தூர்பட்டி, ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் கொற்கை, திருப்புலியங்குடி, மஞ்சள்நீர் காயல், வெள்@ர், உடன்குடி வட்டாரத்தில் புதுமனை, சந்தையடி தெரு, வைத்திலிங்கபுரம், காலம்புது தெரு, திருச்செந்தூர் வட்டாரத்தில் அரசு பொது மருத்துவமனை - திருச்செந்தூர், அரசு பொது மருத்துவமனை - காயல்பட்டினம், ராமநாதபுரம், பல்லாதூர், செல்வராஜபுரம், காமராஜபுரம், ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் பேய்குளம், காட்டாரிமங்கலம், புன்னகாயல், நாசரேத், சாத்தான்குளம் வட்டாரத்தில் தோப்பூர், தேரிபனை, புத்தன்தருவை, பெரியதழை, சாத்தான்குளம், கோவில்பட்டி வட்டாரத்தில் அரசு பொது மருத்துவமனை - கோவில்பட்டி, அங்கன்வாடி மையம் - தெற்கு திட்டங்குளம், நகராட்சி அலுவலகம் - பூங்கா சாலை, கோவில்பட்டி, அங்கன்வாடி மையம் - வடக்குபட்டி, எல்.ஆர்.வி. பள்ளி - இந்திராநகர், நடுநிலைப்பள்ளி - சிந்தாமணிநகர், சத்துணவு மையம் - வள்ளுவர் நகர், கோவில்பட்டி, ராஜா உயர்நிலைப்பள்ளி - எட்டையபுரம், ஓட்டப்பிடாரம் துணை சுகாதார நிலையம் - பாஞ்சை காலனி, அங்கன்வாடி மையம் - வெள்ளாரம், அங்கன்வாடி மையம் - வள்ளிநாயகிபுரம், அங்கன்வாடி மையம் - சக்கம்மாள்புரம், அங்கன்வாடி மையம் - ஏ.வெங்கடேசபுரம், கயத்தார் துணை சுகாதார நிலையம் - ராஜாபுதுகுடி, ஆரம்ப சுகாதார நிலையம் - கயத்தார், சத்துணவு மையம் - பாளையாபுரம், ஆரம்ப சுகாதார நிலையம் - கயத்தார், ஆரம்ப சுகாதார நிலையம் - கழுகுமலை, துணை சுகாதார நிலையம் - வாரணமுட்டி, ஆரம்ப சுகாதார நிலையம் - கழுகுமலை, துணை சுகாதார நிலையம் - காமநாயக்கன்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையம் - கடம்பூர், சத்துணவு மையம் - ஊசிலங்குளம், ஆரம்ப சுகாதார நிலையம் - வெள்ளாளங்கோட்டை, விளாத்திகுளம் வட்டாரத்தில் கலைஞர் கிளினிக் - விளாத்திகுளம், சமுதாய நலக்கூடம் - தங்கம்மாள்புரம், சமுதாய நலக்கூடம் - சின்னையாபுரம், சமுதாய நலக்கூடம் - தலைகாட்டுபுரம், சமுதாய நலக்கூடம் - பூசனூர், சமுதாய நலக்கூடம் - புளியங்குளம், புதூர் அங்கன்வாடி மையம் - ஸ்ரீரெங்கபுரம், ஊராட்சி அலுவலகம் - கவுண்டம்பட்டி, அங்கன்வாடி மையம் - ரெட்டியாபட்டி, அங்கன்வாடி மையம் - சமத்துவபுரம், ஊராட்சி அலுவலகம் - கீழ அருணசாலபுரம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி - நடுக்காட்டூர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி - முத்துபட்டி, சத்துணவு மையம் - வன்னிபட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - எல்.விபுரம், சத்துணவு மையம் - லெட்சுமிபுரம், அங்கன்வாடி மையம் - சங்கரப்பநாயக்கன்பட்டி, அங்கன்வாடி மையம் - பி.சின்னையாபுரம்
பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu