தூத்துக்குடி புத்தகக் கண்காட்சியில் ரூ. 1.20 கோடிக்கு விற்பனை...

தூத்துக்குடி புத்தகக் கண்காட்சியில் ரூ. 1.20 கோடிக்கு விற்பனை...
X

புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் கனிமொழி எம்.பி. பரிசுகளை வழங்கினார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து புத்தகத் திருவிழா என்ற பெயரில் நடத்திய புத்தக கண்காட்சி தூத்துக்குடி தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 22 ஆம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெற்றது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், 45 புத்தக அரங்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு துறைகளின் சார்பாக அரசு திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் 7 அரங்குகளும், உள்ளூர் பதிப்பகத்தார் சார்பில் புத்தக அரங்குகளும் மற்றும் 9 உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

புத்தகக் கண்காட்சியை பார்வையிடவும் புத்தகங்கள் வாங்குவதற்கும் அனைத்து தரப்பு பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியின்போது, பல்வேறு போட்களில் வெற்றி பெற்றவர்களுக்கு கனிமொழி எம்.பி. பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும், மூன்று அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முறையே ஒரு லட்சம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய், 25 ஆயிரம் ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரூ. 1.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை:

நிகழ்ச்சியின்போது, தூத்துக்குடியில் 8 நாட்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில், ரூ. 1.20 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்பனை நடைபெற்றதா அறிவிக்கப்பட்டது. மேலும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய 'தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்" என்ற புத்தகம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது.

8 நாட்கள் புத்தகக் கண்காட்சியில், சிறந்த மேடைப் பேச்சாளர்கள், தமிழறிஞர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசினர். புத்தகக் கண்காட்சியை பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், புத்தக ஆர்வலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் மேடைப் பேச்சாளர்கள் என சுமார் ஒரு லட்சம் பேர்கள் பார்வையிட்டனர்.

அதிர்ஷ்டசாலிகள் தேர்வு:

நிறைவு விழா நிகழ்ச்சியின்போது, புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் வாங்கியோரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட விவரத்தின் அடிப்படையில், கனிமொழி எம்.பி. முன்னிலையில், சிறப்பு குலுக்கல் தேர்வு நடைபெற்றது. அப்போது, தூத்துக்குடி மாவட்டம், பழையகாயலை சேர்ந்த முகமது ஜியாவுதீன் என்பவருக்கு முதல் பரிசு

ரூ.1 லட்சமும், கோவில்பட்டியை சேர்ந்த வேல்சாமி என்பவருக்கு இரண்டாவது பரிசாக ரூ. 50,000-ம், தூத்துக்குடியை சேர்ந்த ராஜலட்சுமி என்பவருக்கு 3 ஆவது பரிசாக ரூ. 25,000-ம் வழங்கப்பட்டது.

இதுதவிர, புத்தகக் கண்காட்சியின்போது பள்ளிகளுக்கு இடையேயான கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கட்டுரைப் போட்டியில் ஏரல் அரசு மேல்நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி நொபிகா ஷாலிகா முதல் பரிசும், திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி நேத்ரா 2 ஆவது பரிசும், ஓட்டப்பிடாரம் மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கவிதா 3 ஆவது பரிசும் பெற்றனர்.

ஓவியப் போட்டியில் சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவர் ஸ்ரீசத்ய பாலா முதல் பரிசும், திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர் அந்த்ரேயா 2 ஆவது பரிசும், நாலுமாவடி காமராஜ் உயர்நிலைப் பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவி மேகலா வனிதா 3 ஆவது பரிசும் பெற்றனர்.

செவ்வியல் நடனப் போட்டியில், தூத்துக்குடி பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி தர்ஷினி முதல் பரிசும், கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி விஷாலி 2 ஆவது பரிசும், திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி ரீனா 3 ஆவது பரிசும் பெற்றனர்.

நாட்டுப்புற நடனப்போட்டியில் (தனி) ஓட்டப்பிடாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி முத்துமலர் முதல் பரிசும், தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி வாணிகா சுபாஷ் 2 ஆவது பரிசும், செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ரோஷன் 3 ஆவது பரிசும் பெற்றனர்.

நாட்டுப்புற நடனப்போட்டியில் (குழு) சுப்பம்மாள்புரம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளி குழுவினர் முதல் பரிசும், விளாத்திகுளம் அரசு உயர்நிலைப்பள்ளி குழுவினர் 2 ஆவது பரிசும், தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி குழுவினர் 3 ஆவது பரிசும் பெற்றனர்.

நாட்டுப்புறப் பாடல் போட்டியில் கோவில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி ஆஷா முதல் பரிசும், தூத்துக்குடி பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி மிராக்ளின் சிலேஷர் 2 ஆவது பரிசும், விளாத்திகுளம் புனித சார்லஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவர் ஷடோனிக்ஸ் 3 ஆவது பரிசும் பெற்றனர்.

செவ்வியல் பாடல் போட்டியில் ஆறுமுகநேரி கமலாவதி உயர்நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி பாபு முதல் பரிசும், தூத்துக்குடி விக்டோரியா மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிரோபின், சரண்யா ஜெனிட்டா ஆகியோர் 2 ஆவது பரிசும் பெற்றனர்.

இசைக்கருவி மீட்டல் (செவ்வியல்) போட்டியில் செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஹரிஹர சுப்பிரமணியன் முதல் பரிசும், கொம்மடிக்கோட்டை ஸ்ரீ காஞ்சி சங்கர பகவதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவர் ராகவன் ராஜா 2 ஆவது பரிசும், கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவர் கௌதம் 3 ஆவது பரிசும் பெற்றனர்.

இசைக்கருவி மீட்டல் (நாட்டுப்புறம்) போட்டியில் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி குழுவினர் முதல் பரிசும், கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி நாகஜோதி 2 ஆவது பரிசும் பெற்றனர். பேச்சுப் போட்டியில் (உடனடி தலைப்பு) ஆறுமுகநேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெயராணி முதல் பரிசும், ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி 2 ஆவது பரிசும், தூத்துக்குடி பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவர் தேவிநேயா 3 ஆவது பரிசும் பெற்றனர்.

பேச்சுப் போட்டியில் புதுக்கோட்டை டிடிடிஏ பி.எஸ்.பி. மேல்நிலைப் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி ஷைனிஷா ஷெரின் முதல் பரிசும், நாகலாபுரம் சீனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி யுவஸ்ரீ செல்லம் 2 ஆவது பரிசும், ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி 3 ஆவது பரிசும் பெற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!