தூத்துக்குடி : பெண் காவலருக்கு மாவட்ட எஸ்பி., நேரில் பாராட்டு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் (CCTNS) இணையதள பயன்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தியது. இதில் மாநில அளவில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.
தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் சி.சி.டி.என்.எஸ். என்ற இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள், காணாமல் போனவர்கள், திருடு போன வாகனங்கள் போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு இந்த இணையதளம் ஏதுவாக உள்ளது.இந்த இணையதள பயன்பாடு குறித்து டெல்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் மேற்படி சி.சி.டி.என்.எஸ். இணையதளத்தை அதிக அளவில் பயன்படுத்தி குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்தல், திருட்டு வாகனங்களை கண்டுபிடித்தல், காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு காவல்துறையில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 3 பேரில் ஒருவராக தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த முதல் நிலை பெண் காவலர் ஜோசி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.காவலர் ஜோாதியைஇ தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கே நேரில் சென்று பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது தூத்துக்குடி டவுண் டிஎஸ்பி கணேஷ், தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu