மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் குறித்து தூத்துக்குடி எஸ்.பி. ஆலோசனை

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் குறித்து தூத்துக்குடி எஸ்.பி. ஆலோசனை
X

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆலோசனை நடத்தினார்.

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமிற்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களுடன் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற உள்ள ‘மக்களுடன் முதல்வர்“ திட்ட சிறப்பு முகாமிற்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகம் முழுவதும் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பகுதியை சேர்ந்தெடுத்து அந்தப் பகுதிக்கே நேரடியாக சென்று மனுக்கள் பெறப்படுகின்றன. அவ்வாறு பெறப்படும் மனுக்கள் உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 11.12.2023 முதல் 29.12.2023 வரை ‘மக்களுடன் முதல்வர்” என்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, திருச்செந்தூர் பேரூராட்சி மற்றும் சாத்தான்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பல்வேறு துறைகளில் இருந்தும் பணியாளர்கள் பணியாற்ற உள்ளார்கள். இதில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக 58 உதவி ஆய்வாளர்கள் சிறப்பு அலுவலர்களாகவும் மற்றும் 46 கணினி விபர உதவியாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர்கள் மற்றும் கணினி விபர உதவியாளர்கள் முகாமில் காவல்துறைக்கு வரையறுக்கப்பட்டுள்ள சேவைகளுக்கான மனுக்களை பெற்று CM Helpline Portalல் பதிவேற்றம் செய்வது குறித்தும், முகாமில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று அறிவுரைகள் வழங்கினார்.

மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன், தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், அமைச்சுப்பணி உதவியாளர் மரிய அந்தோணி சகிலா உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா