தூத்துக்குடி மாநகரில் சில இடங்களில் நாளை மின்தடை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி நகர துணை மின் நிலையத்தில் நாளை (30-11-23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகிறது இதனால், நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தூத்துக்குடி போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1 ஆம் ரயில்வே கேட், 2 ஆம் ரயில்வே கேட், மட்டக்கடை, வடக்கு பீச்ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, எட்டயபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன்ரோடு,மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இதேபோல, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர், சண்முகபுரம் வடக்கு, மேல சண்முகபுரம் முதல் தெரு, ஸ்டேட் வங்கி காலனி, கந்தசாமிபுரம் இஞ்ஞாசிரியார் புரம்,*எழில் நகர், அழகேசபுரம், திரவிய புரம், முத்துகிருஷ்ணா புரம், சுந்தரவேல்புரம் அம்பேத்கார் நகர், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, முனியசாமிபுரம், CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu