தூத்துக்குடி துறைமுகத்திற்கு சொகுசு கப்பல் வருகை.. வெளிநாட்டு பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு...

தூத்துக்குடி துறைமுகத்திற்கு சொகுசு கப்பல் வருகை.. வெளிநாட்டு பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு...
X

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த வெளிநாட்டு பயணிகள் சொகுசு கப்பல்.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த வெளிநாட்டு சொகுசு கப்பலில் இருந்த பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு எம்.எஸ்.அமிரா என்றசர்வதேச சொகுசுக் கப்பலில் சுமார் 698 பயணிகளையும் 386 கப்பல் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு வந்ததடைந்தது. வஉசி துறைமுக கப்பல்தளம் 5-இல் எம். எஸ்.அமிரா பயணிகள் கப்பலில் பயணித்த விருந்தினர்களை பாரம்பரிய இசையான "நாதஸ்வர மங்கள இசை" இசைத்தும், நாட்டுப்புற நடனம் ஆடியும் வரவேற்கப்பட்டனர்.

இந்தக் கப்பலில் வந்த வெளிநாட்டு பயணிகளை கையாளுவதற்கு சுங்கத்துறை, குடியுரிமை மற்றும் சுகாதார அலுவலகங்களுக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் செய்திருந்தது. கப்பலின் சுற்றுலாபயணிகள் வருகைமற்றும் புறப்பாடுசெயல்பாடுகள் எந்தவொரு தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வது மட்டும் அல்லாமல் பயணிகள் துறைமுக வருகை மறக்க முடியாத அனுபவமாக இருப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.


தொடர்ந்து, வஉசி துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரனும்., எம்.எஸ். அமிரா கப்பலின் கேப்டன் கீயூபர்ட் வோலோயும் அவரவர் பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர். மேற்கு இந்திய பஹாமாஸ் தீவுகொடியுடன் வந்த எம்.எஸ். அமிரா பயணிகள் கப்பல் 204 மீட்டர் நீளமும், அதிகபட்சம் 44.8 மீட்டர் காற்றுவரைவு, 13 அடுக்குகள் மற்றும் 413 தங்கும் அறைகளுடன், 835 பயணிகளைக் கொண்டுசெல்லும் திறன் கொண்டது.

இந்தக் கப்பல் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 38 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. ஜெர்மனியில் உள்ள பெர்ன்ஹார்ட் ஷீல்ட் பயணிகள் சேவை மூலம் இயக்கப்படும் இந்தப் பயணிகள் கப்பலில் மூன்று உணவங்கள், ஓய்வறைகள், நூலங்கள், விளையாட்டு, அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கான அறைகள் மற்றும் நீச்சல் குளங்கள் அமைந்திருப்பதுசிறப்பம்சம் ஆகும்.


இந்தக் கப்பலில் பயணம் செய்யும் பயணிகள் பெரும்பாலும் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் சுற்றுலாப் பயணிகள் 70 பேர் திருநெல்வேலியில் உள்ள புனித திரித்துவதேவாலயம் மற்றும் நெல்லையப்பர் கோயிலுக்கும், 200-க்கும் மேற்ப்பட்ட சுற்றுலா பயணிகள் தூத்துக்குடியில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான புனித பனிமய அன்னை பேராலயம் மற்றும் தூத்துக்குடி பகுதியில் உள்ள மற்ற இடங்களுக்கும் சென்றனர்.

வெளிநாட்டு பயணிகள் கப்பல் வருகை குறித்து தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் கூறியதாவது:

எம். எஸ். அமிரா கப்பலின் முதல் அழைப்பை வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், தென் தமிழகத்தின் மையமாக கொண்டு பல்வேறு சுற்றுலாதலங்கள் அமைந்திருப்பதை கருத்தில் கொண்டு, இது போன்றபயணிகள் கப்பல் வருவதினால் வருங்காலங்களில் பல்வேறு பயணிகள் கப்பல் இயக்குபவர்களுடன் துறைமுகம் இணைந்து தூத்துக்குடியில் பல்வேறு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான அனைத்துமுயற்சிகளையும் எடுக்கும் என்று ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி