திருச்செந்தூர் தொழிலதிபர் வீட்டில் 35 பவுன் நகைகளை திருடியதாக தொழிலாளி கைது

திருச்செந்தூர் தொழிலதிபர் வீட்டில் 35 பவுன் நகைகளை திருடியதாக தொழிலாளி கைது
X

திருச்செந்தூரில் கைதான தொழிலாளி பிரபாகரனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்.

திருச்செந்தூர் தொழிலதிபர் வீட்டில் 35 பவுன் நகைகளை திருடியதாக தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலந்தலை பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜெயபாண்டியன் (30). இவரது வீட்டில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடி சென்று உள்ளனர். இதுகுறித்து ஜெயபாண்டியன் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் திருச்செந்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்படை போலீஸார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


விசாரணையில், ஜெயபாண்டியனின் வீட்டில் கடந்த மாதம் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்தவரான திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் (32) என்பவர் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஜெயபாண்டியனின் வீட்டில் புகுந்து அங்கு பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடிச் சென்றது பிரபாகரன் தான் என தெரியவந்தது.

உடனே, தனிப்படை போலீஸார் பிரபாகரனை கைது செய்து அவரிடம் இருந்த 12 லட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் மதியப்புள்ள 35 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!