தூத்துக்குடியில் சிறுமி பாலியல் வழக்கில் கைதான முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் சிறுமி பாலியல் வழக்கில் கைதான முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
X

தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றம். (கோப்பு படம்).

தூத்துக்குடியில் சிறுமி பாலியல் தொந்தரவு வழக்கில் கைதான முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை கடந்த 04.03.2018 அன்று பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்த தங்கபாண்டி (61) என்பவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கை அப்போதைய புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்னதாய் புலன் விசாரணை செய்து கடந்த 31.05.2018 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் குற்றம்சாட்டப்பட்ட தங்கபாண்டிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து, தங்கபாண்டி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்னதாய், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் காவலர் முத்துலெட்சுமி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!