தூத்துக்குடி மாநகர மக்களுக்கு மேயரின் முக்கிய வேண்டுகோள்..!

தூத்துக்குடி மாநகர மக்களுக்கு மேயரின் முக்கிய வேண்டுகோள்..!
X

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி. (கோப்பு படம்).

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாநில பேரிடர் மீட்புக் குழு, மாவட்ட நிர்வாகம், மாநகாரட்சி நிர்வாகம் ஆகியவற்றுடன் பல்வேறு தன்னார்வல அமைப்புகளும் சேர்ந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரப் பொருட்கள் வழங்கும் பணி அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

வரலாறு காணாத அளவில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகரப் பகுதியில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணி முதல்வர் உத்தரவின்படி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் மேற்பார்வையில் முழுவீச்சாக நடைபெற்று வருகிறது. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தபோது பலர் தங்ளது வாகனங்களை தூத்துக்குடி மாநகரில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி வைத்து உள்ளனர்.

தற்போது இயல்பு நிலை திரும்பி சாலைகளில் வாகனம் இயக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதால், சாலையில் ஆங்காங்கே நிறுத்தி உள்ள வாகனங்களை சரி செய்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் மாற்று இடத்தில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தண்ணீர் அகற்றப்பட்ட பெரும்பாலான இடங்களுக்கு மின்சார விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. இரவு 9 மணிக்குள் அனைத்துப் பகுதிகளுக்கும் முறையாக மின்சார விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மின்சாதானங்களை இயக்கும்போது கவனமாக செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன் என மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

தன்னார்வர்லகள் கவனத்துக்கு..

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வலர்கள் சிலர் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வழங்கிவிட்டு செல்வதால் மக்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது அதிருப்தி தெரிவிக்கும் நிலை உள்ளது. மாநகராட்சி பகுதியில் நிவாரணப் பொருட்கள் கொண்டுவரும் தன்னார்வலர்கள் மாநகராட்சி சுகாதார அலுவலர்களை தொடர்பு கொண்டு பொருட்களை வழங்க வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!