தூத்துக்குடி துறைமுகம்-இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தூத்துக்குடி துறைமுகம்-இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
X

தூத்துக்குடி துறைமுகம்-இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்...

தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகம் காணொலி காட்சி மூலம் புதிய மென்பொருளை வடிவமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகம், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து மற்றும் கடலோர தேசிய தொழில்நுட்ப மையம், சென்னை இந்திய தொழில்நுட்பம் நிறுவனம்(மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் தொழில்நுட்ப பிரிவு) ஆகியவை இணைந்து காணொலி காட்சி மூலம் கப்பல் போக்குவரத்துக்கான புதிய இந்திய மென்பொருளை வடிவமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

சென்னை ஹார்பர் இயக்குநர்.

இந்த ஒப்பந்தத்தில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன், இந்திய தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சார்பில் துணை பாதுகாவலர் கேப்டன் பிரவின்குமார் சிங், துறைமுகங்கள், நீர்வழி போக்குவரத்து மற்றும் கடலோர தேசிய தொழில்நுட்ப மையம், இந்திய தொழில்நுட்பம் நிறுவனம் சார்பில் முரளி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் 5 வருட பராமரிப்பு மற்றும் செயலியின் வடிவமைப்பதற்கு செல்லுபடியாகும். மேலும் கூடுதலாக 5 வருடத்திற்கு ஒப்பந்தம்நீட்டிக்கப்படலாம். இந்த புரிந்துணர்வு ஒப்பந்ததின் மூலம் நம் இந்திய நாட்டிலே முதன் முறையாக உருவாக்கப்பட உள்ள கப்பல் போக்குவரத்துக்கான மென்பொருள் செயலியின் மூலம் கப்பல்களின் வருகையை கண்டறிதல், கப்பல்களை அடையாளம் காணுதல், கப்பல்களை கண்காணித்தல், கப்பல்கள் வருகையினை ஆய்வு செய்தல், கப்பல் கேப்டன்களுக்கு தகவலை சரியான வகையில் தெரியப்படுத்துதல், வானிலை ஆய்வு தகவல்களை தெரியப்படுத்துதல் போன்ற வசதிகள் இந்த செயலியின் சிறப்பம்சங்கள் ஆகும். இந்த செயலி ரூ.27 லட்சத்து 81 ஆயிரத்து 600 செலவில் உருவாக்கப்பட உள்ளது.

வ.உ.சி.துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன்

வ.உ.சி.துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் பேசும் போது, இந்திய பெருந்துறைமுகங்களில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதன் முறையாக துறைமுகங்கள், நீர்வழி போக்குவரத்து கடலோர தேசிய தொழில்நுட்ப மையத்தினால் கப்பல் போக்குவரத்துக்கான இந்திய மென்பொருள் வடிவமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது. மிகவும் பொருள் செலவு உள்ள வெளிநாட்டு மென்பொருளை உபயோகிப்பத்தை விட இந்தியாவில் உருவாக்கப்பட உள்ள இந்திய கடற்சார் வர்த்தகத்திற்கு பயன்படும் மென்பொருளானது பாதுகாப்பானது மற்றும் நம்பத்தகுந்ததாகவும் இருக்கும் என கூறினார்.

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி பேசும் போது, இந்த மென்பொருள் செயலியை உருவாக்குவதற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும், தொழில் நுட்பங்களையும் துறைமுகங்கள், நீர்வழி போக்குவரத்து மற்றும் கடலோர தேசிய தொழில்நுட்ப மையம் பெற்று உள்ளது. இதே போன்ற கப்பல் போக்குவரத்தின் திறனை மேம்படுத்துவதற்கான மென்பொருள் செயலியை உருவாக்குவதற்கான கொல்கத்தா துறைமுகத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் துறைமுக கடல்பகுதியின் ஆழத்தை கணக்கிடும் சூரியமின் ஆற்றல் மூலம் செயல்பட கூடிய தானியங்கி படகுகளை உருவாக்கி உள்ளது ஒரு சிறப்பம்சமாகும்.

சர்வதேச கடற்சார் அமைப்பானது அனைத்து துறைமுகங்களிலும் கப்பல் போக்குவரத்தின் மென்பொருள் செயலியை செயல்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் தானியங்கி அடையாள அமைப்பு, கண்காணிப்பு கேமரா, அதிக அதிர்வெண் கொண்ட தகவல் பரிமாற்ற கருவி,திசையை கண்டறியும் திசைமானி, அதிநவீன ரேடார் கருவி போன்ற கருவிகளில் இருந்து விவரங்களை சேகரித்து ஒருங்கிணைந்த வரைபடத்தில் கப்பல்களின் செயல்பாடுகளை காண முடியும் என்றார்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!