தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 18 பேர் பணியிட மாற்றம்.. ஆட்சியர் உத்தரவு...

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 18 பேர்  பணியிட மாற்றம்.. ஆட்சியர் உத்தரவு...
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 18 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றிய அலுவலகங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பணிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் தகுதியான அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். அதில், 18 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட பணியிட மாறுதல் உத்தரவு விவரம் வருமாறு:

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரான சுரேஷ் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த சீனிவாசன், தூத்துக்குடி பாரத் நெட் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி பாராக் நெட் பிரிவில் பணியாற்றி வந்த கருப்பசாமி சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த ராஜேஷ் குமார் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த சுப்புலட்சுமி, தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஹெலன் பொன் ராணி ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த அன்றோ, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த ராமராஜ் ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலராக மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த பாண்டியராஜன், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். கயத்தாறு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த அரவிந்தன் தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த வசந்தா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக பணியாற்றி வந்த நாகராஜன் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலக பணியாற்றி வந்த பாக்கியம் லீலா, கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலேயே வளர்ச்சி பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த செல்வி ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி பணியாற்றி வந்த பானு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலக பணியாற்றி வந்த சந்தோஷம், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த வெங்கடாசலம், புதூர் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். புதூர் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியாற்றி வந்த சிவபாலன், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் பணியில் இருந்து விடுவித்து உடனடியாக அறிவிக்கப்பட்ட புதிய பணியிடத்தில் பதிவேற்றுக் கொண்டு அதன் விபரத்தை சம்பந்தப்பட்ட அலுவலக த்துக்கு உடனே தெரிவிக்கும் படியும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள பணியிடமாதல் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!