தூத்துக்குடியில் தம்பியை கொன்ற வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடியில் தம்பியை கொன்ற வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
X
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் நகைப் பறிப்பு வழக்குகளில் கைதான இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலைமுயற்சி, புகையிலைப் பொருட்கள் கடத்தல், நகைப்பறிப்பு உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். மேலும், போஸ்கோ உள்ளிட்ட வழக்குகளில் கைதாவோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 27.01.2023 அன்று எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழபுரம் பகுதியில் வைத்து எப்போதும்வென்றான் தெற்கு தெருவைச் சேர்ந்த முத்துகுட்டி (26) என்பவரை சொத்து பிரச்சனை காரணமாக கொலை செய்த வழக்கில் அவரது உடன்பிறந்த சகோதரரான பொன்மாடசாமி (31) என்பவரை எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

கொலை வழக்கில் கைதான பொன்மாடசாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 24.01.2023 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பிள்ளையார் கோவில் தெருவில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் தங்க செயின் பறித்துச் சென்ற வழக்கில் திருச்செந்தூர் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த பாரத் (20) என்பவரை தாளமுத்துநகர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

நகைப்பறிப்பு வழக்கில் கைதான பாரத் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தாளமுத்துநகர் நிலைய ஆய்வாளர் மணிமாறன் அறிக்கை தாக்கல் செய்தார். இரண்டு காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில், கொலை வழக்கில் கைதான எப்போதும்வென்றான் சோழபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்மாடசாமி மற்றும் நகைப்பறிப்பு வழக்கில் கைதான திருச்செந்தூர் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த பாரத் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் கைதான இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!