தூத்துக்குடி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டில் 185 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டில் 185 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
X

தூத்துக்குடி மாவட்டத்தில் 2023-ம் ஆண்டில் 185 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு (கோப்பு படம்)

தூத்துக்குடி மாவட்டத்தில் 2023 -ம் ஆண்டில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 185 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, புகையிலைப் பொருட்கள் விற்பனை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்படுவர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல, போக்சோ வழக்கில் கைது செய்யப்படுவோர் மீதும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் 185 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்டக் காவல் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையப் பகுதியில் கடந்த 01.12.2023 அன்று பண்டாரம்பட்டி மேல தெருவை சேர்ந்த பால் வியாபாரியான நந்தகுமார் (27) என்பவர் அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்தவர்களான விக்னேஸ்வரன் என்ற விக்கி (34), பாலசிங் (42) மற்றும் தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (35) ஆகிய 3 பேரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

கொலை வழக்கில் கைதான விக்னேஸ்வரன் (எ) விக்கி, பாலசிங் மற்றும் மாரிமுத்து ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். இதையெடுத்து, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவின்பேரில், கொலை வழக்கில் கைதான

விக்னேஸ்வரன் (எ) விக்கி, பாலசிங் மற்றும் மாரிமுத்து ஆகிய 3 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.

மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 30 பேர் உட்பட 185 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கல்லீரல் பாதுகாக்க சில வழிகளை காணலாமா..? அப்போ இதோ உங்களுக்கான குறிப்பு..!