தூத்துக்குடி கலெக்டர், எஸ்.பி. அலுவலகங்களில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி கலெக்டர், எஸ்.பி. அலுவலகங்களில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 31 ம் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியின்போது, இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.


இதேபோல, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் இன்று ’தேசிய ஒற்றுமை நாள்” உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் உட்பட காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலக நிர்வாக அதிகாரிகள் குமார், ராமசுப்பிரமணிய பெருமாள், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Tags

Next Story
future ai robot technology