தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழா: 10 இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன். (கோப்பு படம்).
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கடந்த 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது. இந்த நிலையில், திருவிழாவுக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தாமல் இருக்கும் வகையில் காவல் துறை சார்பில் 10 இடங்களில் வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
தூத்துக்குடி பனிமய மாதா கோயிலுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக 10 இடங்களில் வாகன நிறுத்தும் (Parking) வசதி செய்யப்பட்டுள்ளது. வ.உ.சி சாலை வழியாக வரும் வாகனங்கள் தூத்துக்குடி வ.உ.சி (WGC ரோடு) சாலை வழியாக மாதா கோவில் வரும் வாகனங்கள் பழைய முனிசிபல் ஆபீஸ் ஜங்ஷன், வடக்கு காட்டன் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக சென்று புனித பிரான்ஸிஸ் சேவியர் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பிரெஞ்சு சேப்பல் தெரு வழியாக சென்று சின்னக்கோவில் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்த வேண்டும்.
தூத்துக்குடி வ.உ.சி (WGC ரோடு) சாலை வழியாக பழைய முனிசிபல் ஆபீஸ் ஜங்ஷன், Fire Service ஜங்ஷன், தெற்கு காட்டன் ரோடு வழியாக சென்று St.பீட்டர் கோவில் தெருவிலுள்ள லசால் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், தெற்கு காட்டன் ரோடு, PPMT ஜங்ஷன் வழியாக சென்று ஜார்ஜ் ரோட்டிலுள்ள சால்ட் ஆபீஸ் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், தருவை மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், PPMT ஜங்ஷன் வழியாக சென்று லயன்ஸ் டவுணிலுள்ள காரப்பேட்டை ஆண்கள் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்த வேண்டும்.
வடக்கு கடற்கரை சாலை வழியாக வரும் வாகனங்கள் தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலை வழியாக மாதா கோவில் வரும் வாகனங்கள் வடக்கு கடற்கரை சாலையிலுள்ள கால்டுவெல் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், வடக்கு கடற்கரை சாலையிலுள்ள முத்துநகர் கடற்கரையில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், வடக்கு கடற்கரை சாலையிலுள்ள துறைமுகம் சமுதாய நலக்கூடம் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், வடக்கு கடற்கரை சாலை, இந்திரா காந்தி சிலை சந்திப்பு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பிரெஞ்சு சேப்பல் தெரு வழியாக சென்று சின்னக்கோவில் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்த வேண்டும்.
தெற்கு கடற்கரை சாலை வழியாக வரும் வாகனங்கள் தெற்கு கடற்கரை வழியாக மாதா கோவில் வரும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மீன்பிடி துறைமுகம் வளாகத்தில் நிறுத்த வேண்டும். மீன்பிடி துறைமுகத்திற்கு வடக்கே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
ஜார்ஜ் ரோடு வழியாக வரும் வாகனங்கள் ஜார்ஜ் ரோடு வழியாக மாதா கோவில் வரும் வாகனங்கள் ஜார்ஜ் ரோட்டிலுள்ள தருவை மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், PPMT ஜங்ஷன் வழியாக சென்று ஜார்ஜ் ரோட்டிலுள்ள சால்ட் ஆபீஸ் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், PPMT ஜங்ஷன், தெற்கு காட்டன் ரோடு வழியாக சென்று St.பீட்டர் கோவில் தெருவிலுள்ள லசால் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், PPMT ஜங்ஷன் வழியாக சென்று லயன்ஸ் டவுணிலுள்ள காரப்பேட்டை ஆண்கள் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, திருவிழாவிற்கு வருகைதரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் நிறுத்தாமல், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் (Parking) நிறுத்தி காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu