தூத்துக்குடி: போக்சோ வழக்கில் கைதானவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

தூத்துக்குடி: போக்சோ வழக்கில் கைதானவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
X

பைல் படம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கடந்த 21.08.2017 அன்று பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் பாளையங்கோட்டை மேடை போலீஸ் ஸ்டேஷன் தெருவை சேர்ந்த சுந்தரம் மகன் அய்யப்பன் (29) என்பவரை பசுவந்தனை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை அப்போதைய பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஷோபா ஜென்ஸி புலன் விசாரணை செய்து கடந்த 18.09.2018 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் குற்றம் சாட்டப்பட்ட அய்யப்பனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து, அய்யப்பன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஷோபா ஜென்ஸியையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமியையும், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை பெண் காவலர் இந்திரா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil