அச்சிடப்பட்ட பேப்பரில் வடை, பஜ்ஜியா – அபராதம் கட்ட வேண்டி வரும் : சாட்டையை சுழற்றியது தூத்துக்குடி

அச்சிடப்பட்ட பேப்பரில் வடை, பஜ்ஜியா – அபராதம் கட்ட வேண்டி வரும் :  சாட்டையை சுழற்றியது தூத்துக்குடி
X

அச்சிடப்பட்ட தாள்களில் வடை, பஜ்ஜி விற்பனைக்குத் தடை

Thoothukudi bans vada, bajji serves in printed papers : செயற்கை நிறம் கலக்காத டீத்தூள்களே பயன்படுத்தப்பட வேண்டும். டீ, காபி போன்ற சூடான பானங்களை, வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகளில் வழங்கக் கூடாது

Thoothukudi bans vada, bajji serves in printed papers : டீக்கடைகளில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட எண்ணெய் பதார்த்தங்களை விற்பனை செய்பவர்கள், இனி அதை அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கக் கூடாது. இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தலைமையில், சமீபத்தில் மாவட்டத்தில் உள்ள டீக்கடை உரிமையாளர்களுக்கான உண்வு பாதுகாப்பு குறித்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், செயற்கை நிறம் கலக்காத டீத்தூள்களே பயன்படுத்தப்பட வேண்டும். டீ, காபி போன்ற சூடான பானங்களை, வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகளில் வழங்கக் கூடாது, வடை, பஜ்ஜி உள்ளிட்ட எண்ணெய் பதார்த்தங்களை, அச்சிடப்பட்ட தாள்களில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டீக்கடைகள் வடை, பஜ்ஜி போன்றவைகளை, வாடிக்கையாளர்களுக்கு அச்சிடப்பட்ட தாளில் வைத்து வழங்கக் கூடாது. இதனை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா