2 குழந்தைகளுடன் தாய் மாயம்

2 குழந்தைகளுடன் தாய் மாயம்
X
2 குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியே சென்ற தாய் மயமானதாக போலீசில் அவரது கணவர் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி அருகே 2 குழந்தைகளுடன் தாய் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தலை சேர்ந்த லிங்கம் மனைவி கனி (30). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி கனி 2 குழந்தைகளுடன் வெளியே சென்றாராம். ஆனால், அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அவரது கணவர் லிங்கம், உறவினர், நண்பர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்களைப் பற்றிய விபரம் தெரியவில்லை. இது குறித்து அவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன தாய் மற்றும் குழந்தைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!