தூத்துக்குடி அருகே பயங்கரம் செல்போனில் கேம் விளையாடிய தங்கை கொலை : அண்ணன் கைது.

செல்போனில் கேம் விளையாடிய தங்கையை கொலை செய்த அண்ணன் கைது

துாத்துக்குடி அருகே வசவப்பபுரம் பகுதியில் செல்போனில் கேம் விளையாடிய தங்கையை அரிவாளால் வெட்டி கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம் பகுதியில் பசும்பொன் நகரை சேர்ந்தவர் சுடலை. விவசாயம் செய்து வரும் இவருக்கு மனைவியும் மாலைராஜா (20) என்ற மகனும் கவிதா (17) என்ற மகளும் உள்ளனர். கவிதா பிளஸ் டூ படித்துள்ளார் இந்தநிலையில் கவிதா தனது செல்போன் மூலம் கேம் விளையாடுவது பேஸ்புக்கில் ஷேர் செய்வது வாட்ஸ் அப்பில் மீம்ஸ் போடுவது என தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார். இதை அவரது அண்ணன் மாலைராஜா கண்டித்துள்ளார். பல தடவை கண்டித்தும் கவிதா செல்போனில் விளையாடுவதை நிறுத்தவில்லை. இந்நிலையில் இன்று மாலை கவிதா செல்போனில் நண்பருக்கு வாட்ஸ் ஆப்பில் சேர் செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது அண்ணன் மாலை ராஜா சத்தம் போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அண்ணன் மாலை ராஜா வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தங்கை கவிதாவை வெட்டியுள்ளார். உடம்பு முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கவிதா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து மாலை ராஜா தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கவிதாவின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி பொன்னரசு ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.தப்பி ஓடிய மாலை ராஜாவை வல்லநாடு காட்டுப்பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare