கொரோனா இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி விரைவில் மாறும்-அமைச்சர் தகவல்

கொரோனா இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி விரைவில் மாறும்-அமைச்சர் தகவல்
X

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி- கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் காணம் பேரூராட்சி காணம் கஸ்பா சமுதாயக் கூடத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தொடர்ந்து மணப்பாடு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை துவக்கி வைத்தார்.

அங்குள்ள பொதுமக்களிடம் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஊரடங்கு உத்தரவினை அறிவித்துள்ளார்கள். இத்தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு வர தடுப்பூசி போடுவது மிக முக்கியமான ஒன்றாகும். எனவே தடுப்பூசி போடும் அனைவரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது எப்போதும் கடைபிடிக்க வேண்டும். மிக முக்கிய அவசியமான காரணங்கள் தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் தூத்துக்குடி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சி பகுதியில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தூய்மை பணியாளர்களுக்கு மாஸ்க், சானிடைசர், பிபி கிட் உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கினார். உடன்குடி பகுதியை சேர்ந்த அங்கு 5ம் வகுப்பு மாணவி (தகப்பனார் பெயர் அப்துல் லத்திப், தாயார் பைக்கரா) சமிலா தாம் சைக்கிள் வாங்க வைத்திருந்த உண்டியல் சேமிப்பு தொகை ரூ.2100ஐ தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு சேர்த்திட அமைச்சரிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் போஸ்கோராஜா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business