Begin typing your search above and press return to search.
தூத்துக்குடி அருகே சாயர்புரத்தில் டைப்ரைட்டிங் பயிற்சிக்கு சென்ற மாணவி மாயம்
சாயர்புரத்தில் டைப்ரைட்டிங் பயிற்சிக்கு சென்ற மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள கொம்புக்கார பொட்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆத்திமுத்து. இவரது மகள் சுகன்யா (17). இவர் கடந்த 30ம் தேதி சாயர்புரத்தில் உள்ள டைப்ரைட்டிங் பயிற்சி நிறுவனத்தில் டைப்பிங் பழகி வந்தார். சம்பவத்தன்று டைப்பிங் பயிற்சிக்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. சுகன்யாவை உறவினர்கள் பல்வேறு இடங்கள் மற்றும் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஆத்திமுத்து சாயர்புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மேரி ஜெஸிந்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.