வீட்டு கதவை உடைக்காமல் பணம் நூதனமாக திருட்டு

வீட்டு கதவை உடைக்காமல் பணம் நூதனமாக திருட்டு
X

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ. 62 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள பனைவிளையை சேர்ந்த முருகேசன் என்பவரது மனைவி வேல்ரதி. கூலி வேலை செய்யும் இவருக்கு ஐந்து மகள்கள்.நான்கு பேருக்கு திருமணம் முடிந்த நிலையில் 5 ஆவது மகளுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணத்திற்காக வைத்திருந்த சுமார் 62 ஆயிரம் ரூபாய் பணத்தை வீட்டில் வைத்து விட்டு வேல்ரதி வெளியூர் சென்றுள்ளார் .

இந்நிலையில் மர்ம நபர் வீட்டின் கதவு மற்றும் பீரோவை சேதப்படுத்தாமல் லாவகமாக திறந்து பீரோவில் இருந்த அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து நகைகளை வைத்துள்ள பெட்டிகளையும் திறந்து பார்த்தபோது நகைகள் அனைத்தும் கவரிங் என்பதால் அதனை அங்கேயே போட்டுவிட்டு பஞ்சு மூட்டையினுள் இருந்த 62 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளான்.

இது குறித்து அறிந்ததும் சப் இன்ஸ்பெக்டர் முருகேஷ்வரி தலைமையிலான கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகளை சேகரித்து சென்றனர். மேலும் இது குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!