ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மழை பாதித்த இடங்களில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நேரில் ஆய்வு
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மழை பாதித்த இடங்களில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் மழை பாதித்த பகுதிகளில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தொடர்ந்து, அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் ஆதிச்சநல்லூர், புதுக்குடி, தெற்குதோழப்பன்பண்ணை ஊராட்சிகளில் அதிகனமழையினால் வீடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டோம். அந்தப் பகுதிகளில் சாலைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டுள்ளம். சாலைகளை விரைவில் சீரமைக்கும் பணி நடைபெறும். வீடுகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நிவாரண உதவிகள் வழங்க உத்தரவிட்டு உள்ளார். அந்த வகையில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உரிய அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெறும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
பின்னர் நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 6,000 மற்றும் 5 கிலோ அரிசி ஆகியவற்றை பொதுமக்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி அதிகனமழையால் பாதிக்கப்பட்டு தற்போது சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து வருகின்ற பள்ளியினை திறந்திடும்வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
பின்னர் பேரூராட்சிக்குட்பட்ட 15 ஆவது வார்டு குறிச்சிக்கோயில் பகுதி மற்றும் 15 ஆவது வார்டு புதுக்குடி பகுதியில் அதிகனமழையால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சாலைகளை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பாதிப்புக்குரிய முழு நிவாரணம் வழங்கிடும் வகையில் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
அதன் பிறகு ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 12 பயனாளிகளுக்கு இலவச தேய்ப்பு பெட்டியினை வழங்கி, மகளிர் குழுக்களுக்கு சுழல்நிதிக்கடன் மற்றும் கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் திட்ட உதவிகள் விரைவில் வழங்கப்படும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் உறுதி அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu