Senior Citizen Pension Recovery கனிமொழி எம்.பி. முயற்சியால் மூதாட்டிக்கு ஓய்வூதிய பணப்பலன்
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முயற்சியால், மூதாட்டிக்கு 36,000 ரூபாய் முதியோர் ஓய்வூதியம் பணம் திரும்ப வழங்கப்பட்டது.
Senior Citizen Pension Recovery
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த தங்கம் என்ற தங்கம்மாள் 95 வயது மூதாட்டிக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி மூதாட்டியின் வங்கி கணக்கில் கடந்த 36 மாதங்களாக வரவு வைக்கப்பட்டிருந்த ஓய்வூதிய பணமானதை அவர் வங்கி கணக்கில் இருந்து திரும்ப அரசின் சார்பில் பெறப்பட்டது.
95 வயதான மூதாட்டி தங்கம்மாளின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்காததால் அவரது பணம் திரும்ப அரசின் கணக்குக்கு வரவு வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உடனடியாக தலையிட்டு விசாரணை செய்தார். மேலும், வயதான முதியோர் உதவித் தொகை முழுவதும் அரசு கஜானாவில் சேர்க்கப்பட்ட 36 ஆயிரம் ரூபாய் தொகை அனைத்தும் திரும்பவும் மூதாட்டி இடம் ஒப்படைக்க அவர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கோட்டாட்சியர் குருசந்திரன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து 36,000 ரூபாய் பணத்தை திரும்ப பெற்றனர்.
பின்னர், வருவாய் கோட்டாட்சியர் குருசந்திரன் காசோலை மூலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி தங்கம்மாளிடம் வழங்கினார். பணத்தை பெற்றுக் கொண்ட மூதாட்டி தங்கம்மாள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதில், வட்டாட்சியர் ரதிகலா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த விஷயத்தில் யார் செய்த தவறு என்று விசாரித்துக் கொண்டு காலம் தாழ்த்தாமல் பணத்தை மூதாட்டி இடம் ஒப்படைத்த நிகழ்வு அந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu