சாத்தான்குளம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறால் கல்லால் தாக்கி ஒருவர் படுகொலை: 2 பேர் கைது

சாத்தான்குளம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறால் கல்லால் தாக்கி ஒருவர் படுகொலை:  2 பேர் கைது
X
சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசாரின் முதற்க்கட்ட விசாரணையில் : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், அருகேயுள்ள தச்சமொழி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் குமார் என்ற அருமை கொடி (58). இவருக்கு திருமணமாகி மனைவியும் 3 மகள்கள், மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் பனை ஓலையில் தட்டி செய்யும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தேவ ஆசீர்வாதம் மகன் செல்வராஜ் (50), செல்வராஜ் மகன் டேவிட் (24) ஆகியோரும் அவருடன் வேலை செய்து வருகிறார்கள்.

இன்று மாலை 4 மணியளவில் வேலை முடிந்ததும் மூன்று பேரும் சாத்தான்குளம் புதுக்குளம் என்ற இடத்தில் உள்ள காட்டுப் பகுதியில் வைத்து மது அருந்தினர். அப்போது மூன்று பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த செல்வராஜ் மற்றும் டேவிட் இருவரும் சேர்ந்து குமார் என்ற அருமை கொடியை அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு தாக்கினார்கள். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருமை கொடி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய எஸ்பி ஜெயக்குமார், இச்சம்பவத்தில் தலைமறைவான செல்வராஜ் மற்றும் டேவிட் இருவரையும் பிடிக்க உத்தரவிட்டார். இழைதத்தொடர்ந்து கொலை நடந்த அரை மணி நேரத்தில் செல்வராஜ் மற்றும் டேவிட் இருவரையும் போலீசார் காட்டுப்பகுதியில் மறைந்திருந்த போது அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் பட்டபகலில் குடிபோதையில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai future project