சாத்தான்குளம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

சாத்தான்குளம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
X

சாத்தான்குளம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.

சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாதம்தோறும் பல்வேறு காவல் நிலையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கம். மேலும், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்டு காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்குவது உண்டு.

இந்த ஆய்வின்போது, காவல் துறையினர் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், நிலுவையில் உள்ள வழக்குகள் விவரம், காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சட்டம், ஒழுங்கு பிரச்னை, பொதுமக்களுடனான நல்லுறவு உள்ளிட்டவை குறித்து காவல் கண்காணிப்பாளர் தகவல்களை கேட்டறிந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

அந்த வகையில், சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சாத்தான்குளம் உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், நாசரேத், தட்டார்மடம் மற்றும் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களின் முக்கிய வழக்கு கோப்புகளையும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், சாத்தான்குளம் உட்கோட்ட காவல் அலுவலக போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கி, உட்கோட்ட அலுவலக வளாகம் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா? என பார்வையிட்டு வளாகத்தில் மரக்கன்று நடவு செய்தார்.

இந்த ஆய்வின்போது சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அருள், தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் திருநாவுக்கரசு, சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பாமா பத்மினி மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..