வல்லநாடு கோயிலில் 108 மரக்கன்றுகள் நடும் திட்டம்: ஆட்சியர் துவக்கி வைப்பு
வடவல்லநாடு மூலம் ஆவுடையம்மாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் வளாகத்தில் 108 மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மரக்கன்றுகளை நட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாடு ஊராட்சி வடவல்லநாட்டில் வேளாண்மை துறையின் மூலம் ஆவுடையம்மாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் வளாகத்தில் 108 மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் மரக்கன்றுகளை இன்று (06.08.2021) நட்டினார்.
பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது: கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாடு ஊராட்சி வடவல்லநாட்டில் உள்ள ஆவுடையம்மாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். வல்லநாட்டு மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தூய்மைபடுத்தி மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 27 நட்சத்திரத்திற்கு உகந்த மரங்கள் மற்றும் சுவாமிக்கு உகந்த மரங்களை நட உள்ளோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 53 குளங்களை தூர்வாரி குளத்தின் கரையினை பலப்படுத்த மரங்களை நடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதன்முறையாக கீழ ஆத்தூர் குளத்தினை தூர்வாரி அங்குள்ள ஆகாய தாமரையினை வீணாக்காமல் நபார்டு உதவியுடன் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கு பயிற்சி நேற்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. வல்லநாட்டில் உள்ள குளத்தினை தூர்வாருவதற்கான நடவடிக்கை கடந்த முறை கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ், இங்கு வருகை புரிந்தபொழுது அறிவுரைகள் வழங்கினார்கள். எனவே வல்லநாட்டில் உள்ள குளத்தினை தூர்வாரி மீண்டும் நல்ல நிலைமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து தூத்துக்குடி முத்தையாபுரம் ஸ்ரீவரதவிநாயகர் கோவில் தெருவில் ஊர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக துவக்கப்பட்டு வாசக சாலை திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், கலந்துகொண்டு வாசக சாலையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். விருச்சம் இளைஞர் மன்றம் சேமிப்பு திட்டத்தின் கீழ் இளைஞர்களிடம் வசூலிக்கப்பட்ட சந்தா சேமிப்பு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் முதல் உறுப்பினர் இந்துஜா அவர்களுக்கு அவருடைய சந்தா பணம் ரூ.1200ஐ மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதிராஜேந்திரன், வேளாண்மைத்துறை துணை அலுவலர் ஆனந்தன், ஆவுடையம்மாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் ஆய்வாளர்கள் நம்பி, பகவதி, பஞ்சாயத்து தலைவர்கள் சந்திரமுருகன், செல்விசங்கர், வட்டாட்சியர் ஜஸ்டின், முக்கிய பிரமுகர்கள் ராமகிருஷ்ணன், இசக்கி, சுபா மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu