ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் பங்குனி பிரமோற்சவ விழா தேரோட்டம்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் பங்குனி பிரமோற்சவ விழா தேரோட்டம்
X

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வாா் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம்.

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டுதேரோட்டம் நடைபெற்றது.

தாமிரபரணி ஆற்றங்கரையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டப் பகுதியில் 9 பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்கள் நவதிருப்பதி கோயில்கள் என அழைக்கப்படுகிறது. அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியின் கரையோரம் ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி நவதிருப்பதி கோவில்களை உள்ளடக்கிய பல சிறப்பு வாய்ந்த கோயில்கள் அமைந்துள்ளன. இதில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவதிருப்பதிகளில் ஒன்பதாவது திருப்பதியும் குருவுக்கு அதிபதியானதுமான ஆழ்வார்திருநகரியில் அருள்மிகு ஆதிநாதர், சுவாமி நம்மாழ்வார் திருக்கோவிலில் அமைந்துள்ளது.

இங்கு பங்குனி பிரம்மோற்சவப் திருவிழா ஆண்டுதோறும் மூலவா் ஆதிநாதருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டிற்கான திருவிழா இன்று கடந்த 27ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 தினங்கள் நடைபெறும் இத் திருவிழாவில் நாள்தோறும் தாயாா்கள் சமேத ஸ்ரீபொலிந்து நின்றபிரான் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் வீதி உலா வந்தாா்.

சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டமும் இன்று காலை நடைபெற்றது. இதற்காக ஸ்ரீதேவி பூதேவி சமேத சுவாமி பொலிந்து நின்றபிரான் காலை 06.40 க்கு மேல் 7.30 க்குள் மேஷ லக்னத்தில் புதுப்பித்த தோில் ஏழுந்தருளினாா். தொடா்ந்து அழ்வாா்திருநகாி ரெங்கராமானுஜ ஜீயா் மற்றும் ஆச்சாா்ய பெருமக்கள் தோ் வடம் பிடிக்க பக்தா்களின் கோவிந்தா கோபாலா கோஷங்களுடன் தேரை இழுத்தனா்.

தேர் நான்கு ரதவீதிகளில் பக்தா்களின் ஆரவாரத்துடன் வலம் வந்தது. நாளை பங்குனி உத்திரத்தில் தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் , தக்கார் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil