Palm Seeds Transplantation கடம்பாகுளம் பகுதியில் பனைமர விதைகள் நடவு செய்யும் பணி தீவிரம்
பனைமர விதைகள் நடவு செய்யும் பணியை இந்தியன் ஆயில் நிறுவன முதுநிலை மேலாளர் ரஞ்சித் குமார் தொடங்கி வைத்தார்.
Palm Seeds Transplantation
தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்நிலை பகுதிகளின் கரையோரங்களில் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக மதர் சமூக சேவை நிறுவனம் கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து பனை மர விதைகளை விதைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக அங்கமங்கலம் ஊராட்சியுன் இணைந்து கடம்பாகுளம் கரையோரங்களில் ஒரு லட்சம் பனைமர விதைகள் விதைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி பல்வேறு கட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இரண்டாவது கட்டமாக நடைபெற்ற பனைமர விதைகள் நடவு செய்யும் பணி தொடக்க நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை அங்கமங்கலம் பாலமுருகன் வரவேற்றார். மதர் சமூக சேவை நிறுவன இயக்குநரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான கென்னடி தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன முதுநிலை மேலாளர் ரஞ்சித் குமார், உதவி மேலாளர் சிவக்குமார், அங்கமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பானுப்ரியா பாலமுருகன் ஆகியோர் இணைந்து பனை மர விதைகள் விதைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநர் பானுமதி முன்னிலை வைத்தார். இதில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில துணைத் தலைவர் சுதாகர், தென் மண்டல தலைவர் ராம்குமார், தென் மண்டலச் செயலாளர் இம்மானுவேல், திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் காயல் பாலா, பஞ்சாயத்து செயலாளர் கிருஷ்ணம்மாள், ஊராட்சி கணினி இயக்குநர் ஜென்சி உட்பட பல கலந்து கொண்டனர். முடிவில் பரமேஸ்வரி நன்றி கூறினார்.
அதனை தொடர்ந்து தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் பனைமர விதைகளை தொடர்ந்து விதைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu